மட்டக்களப்பு மாவட்டத்தில் சஜித் முன்னிலை

Batticaloa Anura Kumara Dissanayaka Ranil Wickremesinghe Sajith Premadasa Eastern Province
By Laksi Sep 22, 2024 04:13 AM GMT
Laksi

Laksi

புதிய இணைப்பு

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் மட்டக்களப்பு மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 139,110 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 91,132 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 38,832 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 36,905 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

மூன்றாம் இணைப்பு

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 45,325 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 24,782 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கிய அரியநேத்திரன் 10,890 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 7,504 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இரண்டாம் இணைப்பு

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 64, 068 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 41, 538 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 24, 168 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் 12, 758 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளார். 

முதலாம் இணைப்பு

நடைபெற்று முடிந்த 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 5967 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 3205 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 2479 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் 901 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது

ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது

யாழ்.மாவட்ட தபால் மூல வாக்குகளின் முடிவுகள்!

யாழ்.மாவட்ட தபால் மூல வாக்குகளின் முடிவுகள்!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW