யாழ்.மாவட்ட தபால் மூல வாக்குகளின் முடிவுகள்!

Sri Lankan Tamils Jaffna President of Sri lanka Election
By Chandramathi Sep 22, 2024 12:16 AM GMT

தபால் மூல வாக்கு முடிவுகள்

இன்றைய தினம் நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் யாழ்ப்பாண மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 9,277வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 7,640 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

இதன்படி, தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் 4,207 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.  

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 2,250 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.     

யாழ்.தொகுதி முடிவுகள்   

இதன்படி, தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் 7,494 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.    

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 7,080 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.  

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 7,058 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.  

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 2,186 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.