முதலீடு செய்வதற்கு நாட்டில் உகந்த சூழல் : ஜனாதிபதி உறுதி

Anura Kumara Dissanayaka Sri Lanka Politician Sri Lanka President of Sri lanka Presidential Update
By Rakshana MA Dec 05, 2024 12:45 PM GMT
Rakshana MA

Rakshana MA

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரத்தன்மையுடன் முதலீடு செய்வதற்கு உகந்த சூழல் உருவாகியுள்ளது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை முதலீட்டுச் சபையின் உயர்மட்ட அதிகாரிகளை இன்று (05) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவித்ததாவது,

புதிய முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகையில் அரசியல் பக்கச்சார்பு அடிப்படையில் சந்தர்ப்பம் வழங்குதல் போன்ற எந்தவொரு அரசியல் அழுத்தங்களும் இனிமேல் இடம்பெறாது.

வங்காள விரிகுடாவில் காற்று சுழற்சி : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் காற்று சுழற்சி : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தூய்மையான முதலீடு

மேலும், நாட்டுக்கு உகந்த தூய்மையான முதலீடுகளை நாட்டுக்குள் கொண்டு வருவதற்கான முழுச் சுதந்திரத்தை இலங்கை முதலீட்டுச் சபைக்கு வழங்குவேன் என உறுதியளித்துள்ளார்.

முதலீடு செய்வதற்கு நாட்டில் உகந்த சூழல் : ஜனாதிபதி உறுதி | President Anura Statement 2024

அத்துடன் அரசியல் ஸ்திரத்தன்மையை போலவே நாட்டுக்குள் நிதி ஸ்திரத்தன்மையையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமெனவும், அது தொடர்பிலான பாரிய பொறுப்பு முதலீட்டுச் சபைக்கு உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்தும், முதலீட்டுச் சபைக்கு இருக்கும் பொறுப்பை சரியாக நிறைவேற்ற அர்ப்பணிக்க வேண்டும் என்றும், நாட்டுக்கு உகந்த முதலீடுகளை கொண்டு வருவதற்கு முதலீட்டுச் சபைக்கு முழுமையான சுதந்திரம் வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.

மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் மாற்றம்! அநுர அரசாங்கத்திற்கு ஓர் கோரிக்கை

மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் மாற்றம்! அநுர அரசாங்கத்திற்கு ஓர் கோரிக்கை

புதிய முதலீட்டு வலையங்கள்

முதலீட்டுச் சபையின் செயற்திறனை அதிகரிப்பதற்கான நிதி ஒதுக்கீட்டை எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் பெற்றுக்கொடுப்பதற்கும், புதிதாக ஐந்து முதலீட்டு வலயங்களை அடுத்த வருடத்தில் ஆரம்பிப்பது குறித்தும் கவனம் செலுத்தியிருப்பதாகவும் கூறியுள்ளார்.

முதலீடு செய்வதற்கு நாட்டில் உகந்த சூழல் : ஜனாதிபதி உறுதி | President Anura Statement 2024

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் அர்ஜூன ஹேரத், பணிப்பாளர் நாயகம் ரேணுக வீரகோன் உள்ளிட்ட அதிகாரிகள் இதன்போது கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இனவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதை பேச மறந்த ஜனாதிபதி : கோடீஸ்வரனின் விசனம்

இனவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதை பேச மறந்த ஜனாதிபதி : கோடீஸ்வரனின் விசனம்

அவசியமற்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகளை பயன்படுத்துவதை தவிருங்கள்

அவசியமற்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகளை பயன்படுத்துவதை தவிருங்கள்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


Gallery