வங்காள விரிகுடாவில் காற்று சுழற்சி : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Sri Lanka Sri Lankan Peoples Climate Change Weather
By Rakshana MA Dec 05, 2024 10:10 AM GMT

வங்காள விரிகுடாவில் எதிர்வரும் 07ஆம் திகதி புதிய ஒரு காற்று சுழற்சி உருவாகும் என யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியற்துறை தலைவர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இது மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இலங்கைக்கு அருகாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இனவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதை பேச மறந்த ஜனாதிபதி : கோடீஸ்வரனின் விசனம்

இனவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதை பேச மறந்த ஜனாதிபதி : கோடீஸ்வரனின் விசனம்

மீண்டும் தாழமுக்கம் 

அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் 19ஆம் திகதி மீண்டும் ஒரு தாழமுக்கம் வங்காள விரிகுடாவில் உருவாகும் வாய்ப்புள்ளது.

வங்காள விரிகுடாவில் காற்று சுழற்சி : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Alert Again Climate Change In Sri Lanka

இதுவும் மேற்கு மற்றும் வட மேற்கு திசை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சில மாதிரிகள் இது ஒரு புயலாக வலுப்பெறும் என வெளிப்படுத்துகின்றன. அதேவேளை சில மாதிரிகள் இதனை கிழக்கு மாகாணத்திற்கருகாக நகர்ந்து வடக்கு மாகாணத்திற்கு மிக அண்மித்து வரும் என காட்டுகின்றன.


மருதமுனை பிரதேசத்தில் வடிகான் நிர்மாண பணி ஆரம்பம்

மருதமுனை பிரதேசத்தில் வடிகான் நிர்மாண பணி ஆரம்பம்

மூதூரில் டெங்கு நோயை கட்டுப்படுத்துவது குறித்து கலந்துரையாடல்

மூதூரில் டெங்கு நோயை கட்டுப்படுத்துவது குறித்து கலந்துரையாடல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW