அதிகம் பகிரப்பட்டு வரும் ஜனாதிபதி அநுரவின் புகைப்படம்

Anuradhapura Anura Kumara Dissanayaka Sri Lanka Sri Lankan Peoples President of Sri lanka
By Rakshana MA Dec 21, 2024 08:22 AM GMT
Rakshana MA

Rakshana MA

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது தாயை சென்று பார்த்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

ஜனாதிபதியின் தாயார், சுகயீனம் காரணமாக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தையில் முட்டையின் விலையில் வீழ்ச்சி

சந்தையில் முட்டையின் விலையில் வீழ்ச்சி

பகிரப்பட்டு வரும் புகைப்படம்

இந்தநிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தாயை ஜனாதிபதி நேரில் சென்று பார்வையிட்டு, தாயாரின் கையைப் பிடித்த வண்ணம் அமர்ந்திருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகளவானோரால் பகிரப்பட்டு வருகின்றது.

அதிகம் பகிரப்பட்டு வரும் ஜனாதிபதி அநுரவின் புகைப்படம் | President Anura Kumara Viral Pictures

குறிப்பாக, கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அரசியல்வாதிகளின் குடும்பத்தாருக்கு, உறவினர் உள்ளிட்டவர்களுக்கு சுகயீனம் என்றாலும் கூட தனியார் மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்கைகள் பெற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன.

இவ்வாறான நிலையில், ஜனாதிபதியைச் சார்ந்தவர்கள் அரச வைத்தியசாலைகளில் சேவையைப் பெற்றுக் கொள்வது குறித்து பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மட்டக்களப்பில் பாவனைக்கு உதவாத நூற்றுக்கணக்கான மென்பான போத்தல்கள் அழிப்பு

மட்டக்களப்பில் பாவனைக்கு உதவாத நூற்றுக்கணக்கான மென்பான போத்தல்கள் அழிப்பு

ஜனாதிபதியின் உயிருக்கு அச்சுறுத்தல்

இதேவேளை, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க எளிமையாக செயற்படுவது தொடர்பில் பாராட்டப்பட்டாலும் கூட அதே சமயம் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அதிகம் பகிரப்பட்டு வரும் ஜனாதிபதி அநுரவின் புகைப்படம் | President Anura Kumara Viral Pictures

ஜனாதிபதியின் இவ்வாறான செயற்பாடுகள் அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில அண்மையில் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தீவிர பாதுகாப்பு : 40,000 பொலிஸார் பணியில்

இலங்கையில் தீவிர பாதுகாப்பு : 40,000 பொலிஸார் பணியில்

கடன் தரப்படுத்தலில் சாதகமான போக்கை எட்டிய இலங்கை

கடன் தரப்படுத்தலில் சாதகமான போக்கை எட்டிய இலங்கை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW