மட்டக்களப்பில் பாவனைக்கு உதவாத நூற்றுக்கணக்கான மென்பான போத்தல்கள் அழிப்பு

Batticaloa Eastern Province Crime Law and Order
By Laksi Dec 21, 2024 05:47 AM GMT
Laksi

Laksi

மட்டக்களப்பில் (Batticaloa) பாவனைக்கு உதவாத செயற்கையான பொருட்கள் சேர்க்கப்பட்ட சந்தையில் விற்பனை செய்யப்பட்ட பெருமளவிலான மென்பான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது, சுமார் 481 மென்பான போத்தல்கள் சுகாதார அதிகாரிகளால் நேற்று (20) கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எஸ்.முரளீஸ்வரனின் ஆலோசனையின் பேரில் பொதுச் சுகாதார அதிகாரிகள் மேற்படி திடீர் தேர்தலை நடாத்தி குறித்த சட்டவிரோத மனித பாவனைக்குதவாத மென்பானங்களை கைப்பற்றியுள்ளனர்.

பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்! வாகன இறக்குமதிக்கான அனுமதி

பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்! வாகன இறக்குமதிக்கான அனுமதி

அபராதம் விதிப்பு

'பென்சாயிட் அசிட்' எனப்படும் ஒரு விதமான மனித பாவனைக்கு உதவாத திரவம் குறித்த மென்பான போத்தல்களில் சேர்க்கப்பட்டுள்ளதுடன் பொருத்தம் இல்லாத நிலக்கலவையும் இதில் இணைக்கப்பட்டிருப்பதாக சுகாதார அதிகாரிகள் குறித்த மென்பான தயாரிப்பு நிறுவனம், விநியோகஸ்தர், விற்பனையாளர் ஆகியோர் மீது வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

மட்டக்களப்பில் பாவனைக்கு உதவாத நூற்றுக்கணக்கான மென்பான போத்தல்கள் அழிப்பு | 481 Unused Drink Bottles Recovered In Batti

இதன்போது, விற்பனையாளர் மற்றும் விநியோகஸ்தர் ஆகியோருக்கு தலா 15,000 வீதமும் உற்பத்தியாளருக்கு 30 ஆயிரம் ரூபாயுமாக 60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 குறித்த மென்பானத்தை கைப்பற்றப்பட்ட மென்பானங்களை அழிக்குமாறும் ஏனைய விற்பனை நிலையங்களில் இருக்கும் பானங்களை அகற்றுமாறும் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி தர்ஷினி உத்தரவிட்டார் .

அரிசி தட்டுப்பாடு குறித்து வெளியான தகவல்

அரிசி தட்டுப்பாடு குறித்து வெளியான தகவல்

கடன் தரப்படுத்தலில் சாதகமான போக்கை எட்டிய இலங்கை

கடன் தரப்படுத்தலில் சாதகமான போக்கை எட்டிய இலங்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW