சந்தையில் முட்டையின் விலையில் வீழ்ச்சி

Sri Lanka Economy of Sri Lanka Egg
By Laksi Dec 21, 2024 06:36 AM GMT
Laksi

Laksi

நாட்டின் சில பகுதிகளில் முட்டையின் விலை வேகமாக குறைந்து செல்வதாக முட்டை (Egg) வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, ஜாஎல, கந்தானை, ராகம உள்ளிட்ட பிரதேசங்களில் முட்டையின் விலை குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், முன்னர் 40 ரூபாய் தொடக்கம் 45 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்ட முட்டை தற்போது 25 ரூபாய் தொடக்கம் 30 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரிசி தட்டுப்பாடு குறித்து வெளியான தகவல்

அரிசி தட்டுப்பாடு குறித்து வெளியான தகவல்

முட்டை விலை

அத்தோடு,  சராசரியாக 50 கிராமுக்கு குறைவான எடையுள்ள முட்டையை 30 ரூபாய் முதல் 32 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்கலாம் என அந்த சங்கத்தின் தலைவர் என்டன் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.

சந்தையில் முட்டையின் விலையில் வீழ்ச்சி | Egg Price In Sri Lanka

மேலும், பண்டிகைக் காலத்தை முன்னிட்டு எதிர்வரும் நாட்களில் சில பொருட்களின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக வர்த்தக சங்கங்கள் தெரிவிக்கின்றன.

பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்! வாகன இறக்குமதிக்கான அனுமதி

பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்! வாகன இறக்குமதிக்கான அனுமதி

மட்டக்களப்பில் பாவனைக்கு உதவாத நூற்றுக்கணக்கான மென்பான போத்தல்கள் அழிப்பு

மட்டக்களப்பில் பாவனைக்கு உதவாத நூற்றுக்கணக்கான மென்பான போத்தல்கள் அழிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW