இலங்கையில் தீவிர பாதுகாப்பு : 40,000 பொலிஸார் பணியில்

Sri Lanka Sri Lankan Peoples
By Rakshana MA Dec 21, 2024 05:37 AM GMT
Rakshana MA

Rakshana MA

எதிர்வரும் பண்டிகை காலத்தில் பொது மக்களின் பாதுகாப்பினை கருத்திற்கொண்டு நாடாளாவிய ரீதியில் 40,000 பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 500க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் அதிகாரிகள் சிவில் உடையில் மக்களுடன் மக்காளாக இணைந்து பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர்.

மேலும், பொது மக்கள் நடமாடும் இடங்களில் சீருடை அணிந்த அதிகாரிகளும் காணப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வருமான வரி தொடர்பான ஜனாதிபதியின் முடிவு!

வருமான வரி தொடர்பான ஜனாதிபதியின் முடிவு!

பலத்த பாதுகாப்பு

இதற்கிடையில் இந்த பாதுகாப்பு நடவடிக்கைக்கு புலனாய்வு அதிகாரிகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் அவர்களின் பணிகளை மேற்பார்வையிட 48 மூத்த அதிகாரிகள் மற்றும் 769 ஆய்வு தர அதிகாரிகளும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் தீவிர பாதுகாப்பு : 40,000 பொலிஸார் பணியில் | Police Mans For Safest In Sri Lanka

இதேவேளை, மேல் மாகாணத்தில் மாத்திரம் 6,500 இற்கும் அதிகமான பொலிஸார் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்! வாகன இறக்குமதிக்கான அனுமதி

பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்! வாகன இறக்குமதிக்கான அனுமதி

கடன் தரப்படுத்தலில் சாதகமான போக்கை எட்டிய இலங்கை

கடன் தரப்படுத்தலில் சாதகமான போக்கை எட்டிய இலங்கை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW