அரசியல் கைதுகள் அரசுக்கு எதிராக மாறும் - மகிந்த எச்சரிக்கை
Mahinda Rajapaksa
Sri Lanka Politician
NPP Government
By Rakshana MA
அரசியல் பழிவாங்கல்களை முன்னிலைப்படுத்தி இடம்பெறும் கைதுகள் அரசாங்கத்துக்கு எதிரானதாக அமையும் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
சிறீலங்கா பொதுஜன பெர முனவின் தொகுதி அமைப்பாளர் நியமனம் தொடர்பான கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அரசாங்கம் அரசியல் பழி வாங்களுக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்குவது வெளிப்படையாக தெரிகிறது.
அரசியல் கைதுகள்
இதற்கு சுயாதீன ஆணைக்குழுக்களை பயன்படுத்திக்கொள்கிறது. அரசியல் பழிவாங்கல்களை முன்னிலைப்படுத்தி இடம்பெறும் கைதுகள் அரசாங்கத்துக்கே எதிரானதாக அமையும்.
மக்கள் மத்தியில் செயல்பாட்டு ரீதியிலான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள் - என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |