ஏழு மாதங்களில் 432 பொலிஸார் இடைநிறுத்தம்
கடந்த ஏழு மாத காலத்தினுள் 432 பொலிஸார் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பதவி விலகல் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்தவர்கள், உரிய முறையில் கடமைக்கு சமூகமளிக்காதவர்கள் ஆகியோரே இவ்வாறு பதவி விலக்கப்பட்டுள்ளனர்.
தாமாக பதவி விலகிக் கொண்டவர்களின் ஒரு பிரதம பொலிஸ் இன்ஸ்பெக்டர், ஆறு இன்ஸ்பெக்டர்கள், ஒன்பது சப்இன்ஸ்பெக்டர்கள், ஒரு பெண் சப் இன்ஸ்பெக்டர், சார்ஜண்ட் தர இரண்டு பெண் உத்தியோகத்தர்கள் உள்ளடங்கலாக 62 பேர் உள்ளடங்குவதாக தெரியவந்துள்ளது.
பொலிஸார் இடைநிறுத்தம்
இவர்களுக்கு தாமாக சேவையில் இருந்து விலகிக் கொண்டதற்கான அறிவித்தல் கடிதம் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |