வசந்த முதலிகேவுக்கு பிடியாணை

By Fathima Jan 21, 2026 10:22 AM GMT
Fathima

Fathima

களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தி பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறிய அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகேவை கைது செய்ய மஹர தலைமை நீதவான் லோச்சனி அபேவிக்ரம பிடியாணை பிறப்பித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஒன்பது சந்தேக நபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் வசந்த முதலிகே நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியதால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

டி.எம். சாமிக அசேல, ஜே.ஏ. ஜூட் கிருஷாந்தி, டபிள்யூ.எம். யஷோத் லக்ஷன், டபிள்யூ.கே. சமீர சம்பத், எம்.எம். ரசிக தில்ஹார, எஸ்.ஏ. கிருஷாந்த சுபாசிங்க, ஜனித் ஜனஜய, சஞ்சய ஹெட்டிமுல்ல மற்றும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே ஆகியோர் இந்த வழக்கில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டனர்.

அரசாங்கத்திற்கு எதிராகக் கலகம் 

சட்டவிரோதக் கூட்டத்தின் உறுப்பினர்களாக இருத்தல், அரசாங்கத்திற்கு எதிராகக் கலகம் செய்தல், கலைந்து செல்ல சட்டப்பூர்வ அதிகாரம் உள்ள ஒருவரால் அறிவிக்கப்பட்ட போதிலும் சட்டவிரோதக் கூட்டம் நடந்த இடத்தில் தங்குதல், சட்டவிரோதமான தடையை ஏற்படுத்துதல், அணிவகுப்பு அல்லது ஊர்வலம் நடைபெறும் என்று 06 மணி நேரத்திற்கு முன்பே தெரிவிக்காமல் சட்டவிரோதக் கூட்டத்தைத் தொடங்குதல், கொழும்பு-கண்டி பிரதான சாலையைத் தடுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு கிரிபத்கொட காவல்துறையினர் அவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தனர்.

வசந்த முதலிகேவுக்கு பிடியாணை | Arrest Warrant Issued For Wasantha Mudalige

ஒன்பது மாணவர்களும் 2025 ஆம் ஆண்டு களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக கிரிபத்கொட காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, மஹர நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.