திருக்கோவிலில் கைக்குண்டுகள் மற்றும் ஆயுதங்கள் மீட்பு

Sri Lanka Police Ampara Sri Lanka Police Investigation Eastern Province
By Rakshana MA Aug 10, 2025 06:37 AM GMT
Rakshana MA

Rakshana MA

அம்பாறை - திருக்கோயில் பொலிஸ் பிரிவிலுள்ள வம்மியடி ஆற்று பகுதியில் இருந்து 5 கைக்குண்டுகள் மற்றும் ஆயுதங்களின் உதிரிப் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் நேற்றைய தினம் (09) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அரச புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் பொலிஸாருடன் இணைந்து சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து வெளியான முக்கிய தகவல்கள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து வெளியான முக்கிய தகவல்கள்

மீட்கப்பட்ட குண்டுகள் 

இதன்போது வம்மியடி ஆற்றுப் பகுதியில் இருக்கும் மரம் ஒன்றின் அடிப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 5 கைக்குண்டுகள் மற்றும் ஆயுதங்களின் பாகங்கள் சிலவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

திருக்கோவிலில் கைக்குண்டுகள் மற்றும் ஆயுதங்கள் மீட்பு | 5 Grenades Found In Vammiyadi

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோயில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை குறித்த பிரதேசதம் கடந்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளதுடன், அங்கு அவர்களின் முகாம் இருந்துள்ளமையும் குறிப்பிடதக்கது.

முத்தையன்கட்டு மரணம் குறித்து சாணக்கியன் எம்.பி தெரிவித்த அதிருப்தி

முத்தையன்கட்டு மரணம் குறித்து சாணக்கியன் எம்.பி தெரிவித்த அதிருப்தி

சுவிட்சர்லாந்தில் இலங்கை நபர் கொலை

சுவிட்சர்லாந்தில் இலங்கை நபர் கொலை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW