இறக்குமதி செய்யப்பட்ட 1000 வாகனங்களுக்கு நடக்கப்போவதென்ன
ஹம்பாந்தோட்டை மாகம்புற துறைமுகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட செகுசு வாகனங்கள் ஒரு வருடத்தை அண்மிக்கும் வகையில் வெளியிடப்படாமல் தேங்கி கிடப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த போகொல்லாகம நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்ற நடவடிக்கைகள் இன்று (20.01.2026) ஆரம்பிக்கப்பட்ட நிலையில் கேள்வி நேரத்தில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.
தொடர்ந்துரையாற்றிய அவர்,
வாகனங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இன்றைய நிலை
இந்த வாகனங்கள் குரஸ்போடர் நடைமுறையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.இதற்கு முன்னரும் இந்த நடைமுறை இருந்துள்ளது.இதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டும்.
இது தொடர்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தால் ஏல விற்பனை செய்தாவது அந்த பணத்தை நீதிமன்றத்தில் வைப்பிலிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இந்த வாகனங்கள் கடலை அண்டிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் இதன் சென்சர் போன்றன பழுதடைந்து இயங்காத தன்மை ஏற்பட்டுள்ளது.
மேலும் நீண்ட காலமாக நிறுத்தப்பட்டுள்ளதால் துறைமுக டெமரேஜ் கட்டணம் செலுத்தப்படுவதால் வாகனங்களின் விலைகளும் அதிகரிக்க கூடும்.
மேலும் இந்த வாகனங்கள் வெளியிடப்படவில்லை என்றால் பாவிக்க முடியாத தன்மையும் ஏற்படலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.