பாடசாலைகள் விடுமுறை குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு
Ministry of Education
Education
School Holiday
By Fathima
நாடளாவிய ரீதியில் உள்ள அரச பாடசாலைகள் நாளை (21) முதல் மீண்டும் ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, பாடசாலை தவணையின் முதல் கட்டம் நாளை (21) முதல் பெப்ரவரி 13 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை
இதற்கமைய, மாணவர்களுக்கு பெப்ரவரி 14 முதல் மார்ச் 2 வரை விடுமுறை வழங்கப்படும் என்றும் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் மார்ச் 3 முதல் ஏப்ரல் 10 வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை 2026 பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகி, பெப்ரவரி 26 ஆம் திகதி வியாழக்கிழமை வரை நடைபெறவுள்ளது.