மட்டக்களப்பு கருவப்பங்கேணியில் போதை வியாபாரிகள் கைது

Sri Lanka Police Batticaloa Sri Lankan Peoples Eastern Province Drugs
By Rakshana MA Aug 10, 2025 10:30 AM GMT
Rakshana MA

Rakshana MA

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணி பிரதேசத்தில் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(9) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, சந்தேகநபர்களிடமிருந்து 20 இலட்சம் ரூபா பெறுமதியான ஒரு கிலோ கேரளா கஞ்சா, 50 கிராம் ஜஸ் போதை பொருள் 25 கிராம் ஹரோயின் போதை பொருள் மீட்கப்பட்டுள்ளது.

கிழக்கு முஸ்லிம் அரசியலில் ‘மறைமுக அடிமைத்தனம்’ – மிப்லால் கண்டனம்

கிழக்கு முஸ்லிம் அரசியலில் ‘மறைமுக அடிமைத்தனம்’ – மிப்லால் கண்டனம்

கண்காணிப்பு பணி 

பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்தினவின் ஆலோசனைக்கமைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பரியந்த பண்டாரவின் வழிகாட்டலில் பொலிஸ் பரிசோதகர் எஸ்.சந்திமா தலைமையில் பொலிஸ் கொஸ்தாப்பர்களான ஜெயசிங்க 20637, இகலகம15468, ஜெயரத்தின 53900, கொடிக்கார 40202, டிகாஷான் 90102, தேவராசா 90890; ஆகியேர் கொண்ட குழுவினர் சம்பவதினமான நேற்று இரவு கருவப்பங்கேணி அம்புறோஸ் வீதியில் மாறுவேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

மட்டக்களப்பு கருவப்பங்கேணியில் போதை வியாபாரிகள் கைது | Batticaloa Drug Bust Three Arrested

இதன் போது குறித்த வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் உட்பட 3 பேர் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவர்களை சுற்றிவளைத்து கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து ஒரு கிலோ கேரளா கஞ்சா, 50 கிராம் ஜஸ் போதை பொருள் 25 கிராம் ஹரோயின் போதை பொருட்களை மீட்டனர்.

இதில் மட்டு.கருவப்பங்கேணியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் ஒருவர், அம்பாறை சாய்ந்த மருதைச் சேர்ந்த 34 வயதுடைய மற்றும் நிந்தவூரைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் ஆகியோரை கைது செய்தனர்.

கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியைகளுக்கான கொடுப்பனவு தாமதம்

கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியைகளுக்கான கொடுப்பனவு தாமதம்

ஆரம்ப கட்ட விசாரணை

அத்துடன் கைது செய்யப்பட்ட நிந்தவூரைச் சேர்ந்த பெண்ணின் கணவர் போதை வியாபாரத்தில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதுடன் அவருடன் சிறையில் இருந்த கருவப்பங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த போதை பொருள் வியாபாரியான இளைஞனுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளதாகவும்.

மட்டக்களப்பு கருவப்பங்கேணியில் போதை வியாபாரிகள் கைது | Batticaloa Drug Bust Three Arrested

குறித்த இளைஞன் சிறையில் இருந்து நீதிமன்ற பிணையில் அண்மையில் வெளிவந்து நிந்தவூரைச் சேர்ந்த பெண்ணுடனும் சாய்ந்தமருதைச் சேர்ந்த இளைஞனுடன் சேர்ந்து இந்த வியாபாரத்தில் ஈடுபட்டுவந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதில் கைது செய்யப்பட்டவர்களை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.  

நாட்டில் வேகமாக அதிகரித்து வரும் நோய்: வைத்தியர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டில் வேகமாக அதிகரித்து வரும் நோய்: வைத்தியர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து வெளியான முக்கிய தகவல்கள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து வெளியான முக்கிய தகவல்கள்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW