ஹரிணிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்திற்கு

Anura Kumara Dissanayaka Prime minister Harini Amarasuriya NPP Government
By Benat Jan 20, 2026 07:42 AM GMT
Benat

Benat

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்வரும் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் விவாதத்திற்கு உட்படுத்த ஆளும் கட்சி தயாராக இருப்பதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பேசிய அமைச்சர், எதிர்க்கட்சிகள் அதற்குத் தயாராக இல்லை என்றால், கல்வி சீர்திருத்தங்கள் குறித்த ஒத்திவைப்பு விவாதத்தை அடுத்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடத்தலாம்.

முஸ்லிம் அரச ஊழியர்களுக்கான அறிவிப்பு! வெளியானது விசேட சுற்றறிக்கை

முஸ்லிம் அரச ஊழியர்களுக்கான அறிவிப்பு! வெளியானது விசேட சுற்றறிக்கை

விவாதத்திற்கு தயார்..

எனினும், இந்த விடயம் குறித்து தனது கருத்தை வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்த முடிவை ஆளும் கட்சி அல்ல, எதிர்க்கட்சியே எடுக்க வேண்டும் என்றும், அரசாங்கம் கூறுவது போல் எதிர்க்கட்சி அதை விவாதிக்கத் தயாராக இல்லை என்றும் கூறியுள்ளார்.

ஹரிணிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்திற்கு | No Confidence Motion Against Harini

ஜனவரி 13 ஆம் திகதி அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, ஜனவரி 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் விவாதத்தை நடத்தத் தயாராக இருப்பதாகக் கூறினார்.

மண்சரிவில் சிக்கிய ஆலயத்தில் கண்டுப்பிடிக்கப்பட்ட இரத்தினக்கலால் பரபரப்பு! ஆர்வமுடன் பார்வையிடும் மக்கள்

மண்சரிவில் சிக்கிய ஆலயத்தில் கண்டுப்பிடிக்கப்பட்ட இரத்தினக்கலால் பரபரப்பு! ஆர்வமுடன் பார்வையிடும் மக்கள்