மட்டக்களப்பில் மாணவனை கண்டித்ததால் அதிபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Sri Lanka Police Batticaloa Parenting School Incident School Children
By Rakshana MA Mar 16, 2025 05:24 AM GMT
Rakshana MA

Rakshana MA

மட்டக்களப்பிலுள்ள பாடசாலை ஒன்றில் மாணவனை அதிபர் பிரம்பால் கண்டித்ததையடுத்து அதிபருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவமானது கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, குறித்த பாடசாலையில் கடந்த வெள்ளிக்கிழமை  தரம் 10 இல் கல்வி கற்றுவரும் மாணவி ஒருவரை பார்த்து அதே வகுப்பில் கல்விகற்று வரும் மாணவன் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

கிழக்கில் தொடரும் பிரச்சினைகள் : நிரந்தர தீர்வுக்கான கோரிக்கை முன்வைத்துள்ள ரவூப் ஹக்கீம்

கிழக்கில் தொடரும் பிரச்சினைகள் : நிரந்தர தீர்வுக்கான கோரிக்கை முன்வைத்துள்ள ரவூப் ஹக்கீம்

அதிபரின் நடவடிக்கை

இதனையடுத்து குறித்த மாணவி பாடசாலை அதிபரிடம் சென்று மாணவன் ஒருவன் தனக்கு காதலை தெரிவித்ததாக முறைப்பாடு செய்துள்ளார்.

மட்டக்களப்பில் மாணவனை கண்டித்ததால் அதிபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை | Police Complaint Against Principal At Batticaloa

இந்தநிலையில், அதிபர் குறித்த மாணவனை தனது காரியாலயத்துக்கு வரவழைத்து பிரம்பால் மாணவன் மீது இரண்டு அடி கொடுத்து ஒழுக்கமாக நடக்குமாறு தெரிவித்து எச்சரித்து அனுப்பியுள்ளார்.

இதனை தொடர்ந்து வீட்டிற்கு சென்ற மாணவன் அதிபர் தனக்கு அடித்துள்ளார் என தெரிவித்ததையடுத்து மாணவனை பெற்றோர் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

முதன் முறையாக தங்க விலையில் பாரிய அதிகரிப்பு : வெளியான பின்னணி

முதன் முறையாக தங்க விலையில் பாரிய அதிகரிப்பு : வெளியான பின்னணி

மேலதிக விசாரணை

அத்தோடு, அதிபருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து அதிபரை விசாரணைக்கு அழைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பில் மாணவனை கண்டித்ததால் அதிபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை | Police Complaint Against Principal At Batticaloa

மேலும், இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை சிறுவர் பெண்கள் பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பதவி விலகிய சாலி நளீம் எம்.பி : கட்சி எடுத்துள்ள தீர்மானம்

பதவி விலகிய சாலி நளீம் எம்.பி : கட்சி எடுத்துள்ள தீர்மானம்

ஒன்பது உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தியுள்ள ரிஷாட் கட்சி

ஒன்பது உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தியுள்ள ரிஷாட் கட்சி

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW