ஒன்பது உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தியுள்ள ரிஷாட் கட்சி
Ampara
Sri Lanka Politician
Local government Election
Political Development
By Rakshana MA
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி அம்பாறை மாவட்டத்தில் தனித்துப் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.
இதன்படி, ஒன்பது உள்ளூராட்சி மன்றங்களுக்கு அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் காரியாலயத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிரின் தலைமையில் நேற்று (14) கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்ற தேர்தல்
இதில் கட்சியின் உயர் பீட உறுப்பினரும் முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளருமான ஐ.எல்.எம்.மாஹிர், அம்பாரை மாவட்ட இளைஞர் அமைப்பாளர் றிஷ்லி முஸ்தபா, கட்சியின் அம்பாறை மாவட்ட செயற்குழு செயலாளர் ஏ.காதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




