மட்டக்களப்பில் மின்சார சபைக்கு எதிராக பிரதேச மக்கள் போராட்டம்

Batticaloa Anura Kumara Dissanayaka SL Protest Ceylon Electricity Board Eastern Province
By Laksi Nov 22, 2024 11:56 AM GMT
Laksi

Laksi

மட்டக்களப்பு- வாகரை பகுதியில் மின்சார சபையின் அசமந்தப் போக்கிற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்களால் எதிர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டமானது  இன்று (22.11.2024) மட்டக்களப்பு- வாகரை பிரதேச செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வாகரை பிரதேச செயலக பிரிவில் உள்ள வாகரை, ஊரியன் கட்டு, தட்டு முனை, கதிரவெளி உள்ளிட்ட பல கிராமங்களில் நாளாந்தம் பல மணி நேரம் முன்னறிவித்தல் எதுவுமின்றி, கடந்த இரண்டு மாதங்களாக மின்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் உறுப்பினராக நலீம் தெரிவு

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் உறுப்பினராக நலீம் தெரிவு

கற்றல் நடவடிக்கை பாதிப்பு

இந்நிலையில், இம்முறை உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மாணவர்கள், வர்த்தகர்கள், விவசாயிகள் உள்ளிட்ட கிராம மக்களும் தமது நாளாந்த கடமைகள் மற்றும் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாமல் சிரமப்படுவதாக தெரிவித்தே பொதுமக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் மின்சார சபைக்கு எதிராக பிரதேச மக்கள் போராட்டம் | People Protest Against Electricity Board In Batti

மின்சார சபையின் இந்த செயற்பாட்டினால் பாடசாலை மாணவர்களின் பரீட்சை கால இரவு நேர கற்றல் நடவடிக்கை முற்றாக பாதிப்படைவதுடன் அவர்களது எதிர்காலம் பாதிப்படைய இது ஏதுவாக அமையுமென மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

உயர்தர பரீட்சார்த்திகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

உயர்தர பரீட்சார்த்திகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

மின்சார துண்டிப்பு பிரச்சினை

இதன்போது, “துண்டிக்காதே துண்டிக்காதே முன்னறிவித்தல் இன்றி மின்சாரத்தை துண்டிக்காதே", "மின்சார சபையே பாடசாலை மாணவர்களின் கல்விக்கு தடையாக இருக்காதே" போன்ற வாசகங்களை பொறித்த பதாதைகளை ஏந்தியவாறு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் மின்சார சபைக்கு எதிராக பிரதேச மக்கள் போராட்டம் | People Protest Against Electricity Board In Batti

அத்தோடு, இன்றில் இருந்து ஒரு வார காலத்திற்குள் மின்சார துண்டிப்பு பிரச்சினை நிவர்த்தி செய்யப்படாவிட்டால் இந்தப் பிரச்சனையினை  நாம்  ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் எனவும் மக்கள் இங்கு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், தமக்கான தீர்வை பெற்றுத்தருமாறு வாகரை பிரதேச செயலாளர் அமலினி கார்த்தீபனிடம் மனு ஒன்றை கையளித்ததை தொடர்ந்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW