உயர்தர பரீட்சார்த்திகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

G.C.E.(A/L) Examination Climate Change Weather Education
By Laksi Nov 22, 2024 05:37 AM GMT
Laksi

Laksi

க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நடைபெறவுள்ள காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்காகவும், பரீட்சையை இடையூறு இன்றி நடத்துவதற்காகவும் விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பரீட்சை திணைக்களமும் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளன.

வங்கக் கடலில் வரும் வாரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் கணித்துள்ளது.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் உறுப்பினராக நலீம் தெரிவு

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் உறுப்பினராக நலீம் தெரிவு

அனர்த்த சூழ்நிலை

எனவே பரீட்சை காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்த சூழ்நிலைகளை தவிர்த்து, மாணவர்கள் பரீட்சையை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் வகையில் நல்ல சூழலை உருவாக்குவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உயர்தர பரீட்சார்த்திகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு | Important Notice For Advanced Level Examinees

மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றுவதைத் தடுக்கும் வகையில் ஏதேனும் அனர்த்தம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட நிலையத்தை அடைவதற்கான உதவிகளைப் பெறுவதற்கு சில தொலைபேசி இலக்கங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

புதிய அரசாங்கத்தில் 29 பிரதி அமைச்சர்கள் இன்று பதவிப்பிரமாணம்

புதிய அரசாங்கத்தில் 29 பிரதி அமைச்சர்கள் இன்று பதவிப்பிரமாணம்

தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

இதன்படி, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர இலக்கமான 117 அல்லது விசேட ஒருங்கிணைந்த அவசர செயற்பாட்டு அறை இலக்கங்களான 0113 668 020 அல்லது 0113 668 100 அல்லது 0113 668 013 அல்லது 0113 668 010 மற்றும் 076 3 117 117 ஆகிய இலக்கங்களுக்கு அழைக்க முடியும்.

உயர்தர பரீட்சார்த்திகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு | Important Notice For Advanced Level Examinees

பரீட்சை திணைக்களத்தின் அவசர இலக்கமான 1911 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும் அது குறித்து அறிவிப்பதன் ஊடாக உடனடியாக நிலைமையை தவிர்ப்பதற்கு தேவையான ஒருங்கிணைப்பை மேற்கொள்ள முடியும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

நுவரெலியாவில் பழமையான மரங்களை பாதுகாப்போம் : தொடரப்படும் வழக்கு

நுவரெலியாவில் பழமையான மரங்களை பாதுகாப்போம் : தொடரப்படும் வழக்கு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW