புதிய அரசாங்கத்தில் 29 பிரதி அமைச்சர்கள் இன்று பதவிப்பிரமாணம்

Parliament of Sri Lanka Anura Kumara Dissanayaka Sri Lanka Cabinet National People's Power - NPP
By Laksi Nov 21, 2024 11:45 AM GMT
Laksi

Laksi

புதிய இணைப்பு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதி அமைச்சர்கள் இன்று (21) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் முற்பகல் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் 29 பிரதி அமைச்சர்கள்  செய்து கொண்டனர்.

இதன்படி, பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ: பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர்

நாமல் கருணாரத்ன: விவசாயம் மற்றும் கால்நடை பிரதி அமைச்சர்

வசந்த பியதிஸ்ஸ: கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர்

நலின் ஹேவகே: தொழிற்கல்வி பிரதி அமைச்சர்

ஆர்.எம். ஜயவர்தன: வர்த்தகம், வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர்

கமகெதர திஸாநாயக்க: புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர்

வழக்கறிஞர் டி.பி. சரத்: வீட்டுவசதி பிரதி அமைச்சர்

ரத்ன கமகே: கடற்றொழில், நீரியல் மற்றும் பெருங்கடல் வள பிரதி அமைச்சர்

மகிந்த ஜயசிங்க: தொழிலாளர் பிரதி அமைச்சர்

அருண ஜயசேகர: பாதுகாப்பு பிரதி அமைச்சர்

அருண் ஹேமச்சந்திர: வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர்

அன்டன் ஜெயக்கொடி: சுற்றாடல் பிரதி அமைச்சர்

எம்.முனீர்: தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர்

பொறியியலாளர் எரங்க வீரரத்ன: டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர்

எரங்க குணசேகர: இளைஞர் விவகார பிரதி அமைச்சர்

சதுரங்க அபேசிங்க: கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி பிரதி அமைச்சர்

பொறியியலாளர் ஜனித் ருவான் கொடித்துவக்கு: துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர்

கலாநிதி நாமல் சுதர்ஷன: மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர்

ருவன் செனரத்: மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர்

கலாநிதி பிரசன்ன குமார குணசேன: போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர்

வைத்தியர் ஹன்சக விஜேமுனி: சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர்

உபாலி சமரசிங்க: கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர்

ருவன் சமிந்த ரணசிங்க: சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர்

சுகத் திலகரத்ன: விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர்

சுந்தரலிங்கம் பிரதீப்: பெருந்தோட்ட மற்றும் கிராம அபிவிருத்தி பிரதி அமைச்சர்

சட்டத்தரணி சுனில் வட்டகல: பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார பிரதி அமைச்சர்

கலாநிதி மதுர செனவிரத்ன: கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர்

கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும: நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர்

கலாநிதி சுசில் ரணசிங்க: காணி மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர்

முதலாம் இணைப்பு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதி அமைச்சர்கள் இன்று சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த நிகழ்வானது, இன்று (21) பிற்பகல் 3 மணிக்கு கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர திஸாநாயக்க (Anura Kumara Dissanayaka) தலைமையில் இடம்பெறவுள்ளது.

21 உறுப்பினர்களைக் கொண்ட புதிய அமைச்சரவை கடந்த 18.11.2024 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டது.

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை : வரவு செலவுத் திட்டம் பெப்ரவரியில்

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை : வரவு செலவுத் திட்டம் பெப்ரவரியில்

பிரதி அமைச்சர்கள் 

இதற்கமைய, சில பெரிய அமைச்சுக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பிரதி அமைச்சர்களை நியமிக்க வேண்டியிருப்பதால் பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கை 21இற்கு சற்று அதிகமாகவே இருக்கும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

புதிய அரசாங்கத்தில் 29 பிரதி அமைச்சர்கள் இன்று பதவிப்பிரமாணம் | Npp Government Deputy Ministers Take Oath Today

இதேவேளை, 10ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் இன்று மிக எளிமையான முறையில் நடாத்தப்பட்டுள்ளமை குறி்ப்பிடத்தக்கது.

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW