ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை : வரவு செலவுத் திட்டம் பெப்ரவரியில்

Parliament of Sri Lanka Sri Lanka Parliament Presidential Update Sri lanka election 2024
By Rakshana MA Nov 21, 2024 06:21 AM GMT
Rakshana MA

Rakshana MA

அடுத்த அமர்வு

ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்தபின்னர் அடுத்த அமர்வுக்காக நாடாளுமன்ற அமர்வை டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.  

வரவு செலவுத் திட்டம் பெப்ரவரியில்

எதிர்வரும் 2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், குறை நிரப்பு பிரேரணை எதிர்வரும் மாதம் சமர்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாக அரச சேவையாளர்களின் வேதனம் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி இதன்போது உறுதியளித்தார். அத்துடன், வரவு - செலவு திட்டத்தின் ஊடாக அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு அதிகரிக்கப்படும் என்றும், வறுமை நிலையில் உள்ள மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக விசேட கொடுப்பனவு வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான பணியாளர் மட்ட இணக்கப்பாட்டு ஒப்பந்தம் சனிக்கிழமை (23) கைச்சாத்திடப்படும் என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

இரு தரப்பு கடன் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. பிரதான கடன் வழங்குநர் நாடுகளுடன் பிரத்தியேக ஒப்பந்தம் வெகுவிரைவில் கைச்சாத்திடப்படும்.

நாணய நிதியத்துடனான செயற்திட்டத்தை இந்த ஆண்டுக்குள் பூரணப்படுத்த எதிர்பார்த்துள்ளோம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கூறினார். ' Clean Sri Lanka கருத்திட்டத்துக்காக விசேட ஜனாதிபதி செயலணி அமைக்கப்படும்.

சிறந்த மாற்றத்துக்கு அரசியல் கட்டமைப்பு மாற்றமடைவதைப் போன்று, சமூக கட்டமைப்பும் மாற்றம் பெற வேண்டும் என்றும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.  

சீனாவினால் கிழக்கு மாகாணத்திற்கு பல மில்லியன் ரூபா நிதி உதவி

சீனாவினால் கிழக்கு மாகாணத்திற்கு பல மில்லியன் ரூபா நிதி உதவி

மக்களுக்கு நன்றி..

தம்மீதும் அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை வைத்துள்ள அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தற்சமயம் நாடாளுமன்றத்தில் ஆற்றி வரும் தமது கொள்கைப் பிரகடன உரையின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்ற வகையில் தனியொரு கட்சி நாட்டை ஆள வேண்டும் என்று ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

எனவே, அனைத்து பிரஜைகளின் தேவைகளையும் நிறைவேற்றுவதற்கு தாம் கடமைப்பட்டிருப்பதாகவும், அதற்கு பொறுப்புக் கூறுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை : வரவு செலவுத் திட்டம் பெப்ரவரியில் | New Parliament Session President S Speech

மேலும், இந்த தருணத்தில் இருந்து ஜனாதிபதி என்ற வகையில் மக்களின் பொறுப்பை முழுமையாக ஏற்றுக்கொள்வேன் எனவும், இனவாத அரசியலுக்கு மீண்டும் எமது நாட்டில் இடமில்லை எனவும் இதன்போது ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

மக்களால் வெறுக்கப்படும் நாடாளுமன்றம் மக்களை ஆள்வதற்கு தகுதியற்றது. ஆகவே மக்களால் விமர்சிக்கப்படும் நாடாளுமன்றம் தோற்றம் பெற இடமளிக்க முடியாது என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நாடாளுமன்றம் மக்களுடன் நெருக்கமாக செயற்பட வேண்டும் என்றும் இந்த நாடாளுமன்றம் மக்களின் பரிசோதனையில் சித்தி பெற வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜனாதிபதி உட்பட அனைவரும் நாட்டின் சட்டத்துக்கு அடிபணிய வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.

நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய குற்றங்களை முறையாக விசாரணை செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக் கொடுப்போம் என்றும் ஜனாதிபதி இதன்போது கூறினார்.  


சம்பிரதாயபூர்வமாக நாடாளுமன்றத்திற்குள் அழைத்து வரப்பட்ட ஜனாதிபதி

சம்பிரதாயபூர்வமாக நாடாளுமன்றத்திற்குள் அழைத்து வரப்பட்ட ஜனாதிபதி

ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் கொள்கை பிரகடன உரை தற்போது நிகழ்த்தப்பட்டு வருகின்றது.

10ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடர் இன்று முற்பகல் ஆரம்பமாகியிருந்த நிலையில், சற்று முன்னர் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோரால் சம்பிரதாயபூர்வமாக அழைத்து வரப்பட்டார்.

இந்தநிலையில், தற்போது தனது கொள்கை பிரகடன உரையை ஜனாதிபதி நிகழ்த்தி வருகின்றார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பம் : புதிய சபாநாயகர் நியமிப்பு - LIVE

நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பம் : புதிய சபாநாயகர் நியமிப்பு - LIVE

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW