நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பம் : புதிய சபாநாயகர் நியமிப்பு - LIVE

Parliament of Sri Lanka Sri Lanka Parliament Anura Kumara Dissanayaka Sri Lanka Sri Lanka Cabinet
By Rakshana MA Nov 21, 2024 05:01 AM GMT
Rakshana MA

Rakshana MA

புதிய இணைப்பு 

புதிய இணைப்பு 10ஆவது நாடாளுமன்றத்தின் சபாநாயகராக நாடாளுமன்ற உறுப்பினர் அசோக சபுமல் ரங்வல்ல நியமிக்கப்பட்டுள்ளார்.

10ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில், முதலாவதாக சபாநாயகர் நியமனம் இடம்பெற்றுள்ளது.

சபாநாயகராக அசோக சபுமல் ரங்வல்லவை நியமிக்க பிரதமர் ஹரிணி அமரசூரிய முன்மொழிந்தமை குறிப்பிடத்தக்கது.   

நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பம் : புதிய சபாநாயகர் நியமிப்பு - LIVE | Sri Lanka Parliament Today Live

இதேவேளை, பிரதி சபாநாயகராக நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மத் ரிஸ்வி சாலி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பிரதி சபாநாயகர் - முஹம்மத் ரிஸ்வி சாலி

நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பம் : புதிய சபாநாயகர் நியமிப்பு - LIVE | Sri Lanka Parliament Today Live

நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவராக ஹேமாலி வீரசேகர தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் - ஹேமாலி வீரசேகர

நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பம் : புதிய சபாநாயகர் நியமிப்பு - LIVE | Sri Lanka Parliament Today Live

சபை முதல்வராக பிமல் ரத்நாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சி பிரதம கொறடாவாக நளிந்த ஜயதிஸ்ஸவும், எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.   

சபை முதல்வர் - பிமல் ரத்நாயக்க

நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பம் : புதிய சபாநாயகர் நியமிப்பு - LIVE | Sri Lanka Parliament Today Live

ஆளுங்கட்சி பிரதம கொறடா - நளிந்த ஜயதிஸ்ஸ

நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பம் : புதிய சபாநாயகர் நியமிப்பு - LIVE | Sri Lanka Parliament Today Live

எதிர்க்கட்சித் தலைவர் - சஜித் பிரேமதாச

நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பம் : புதிய சபாநாயகர் நியமிப்பு - LIVE | Sri Lanka Parliament Today Live

முதலாம் இணைப்பு

10ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.

இதற்கான ஒத்திகை நேற்றையதினம்(20) நிறைவு பெற்றிருந்தது.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka) தலைமையில் அமர்வு ஆரம்பமாகியுள்ளதுடன், மிக எளிமையான முறையில் அமர்வு நடத்தப்படவுள்ளமை குறி்ப்பிடத்தக்கது.

சீனாவினால் கிழக்கு மாகாணத்திற்கு பல மில்லியன் ரூபா நிதி உதவி

சீனாவினால் கிழக்கு மாகாணத்திற்கு பல மில்லியன் ரூபா நிதி உதவி

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை

மேலும், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சற்று நேரத்தில் தனது கொள்கை பிரகடன உரையை நிகழ்த்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

நாடாளுமன்றத்தைச் சுற்றி விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் அனைவரும் அங்கு பிரசன்னமாகியுள்ளனர்.

அவை ஆரம்பிக்கும் போது முதலாவதாக சாபாநாயகர் தெரிவு இடம்பெற்றுள்ளது. அதனையடுத்து பிரிதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதித் தலைவர்கள் ஆகியோர் நியமிக்கப்படவுள்ளனர்.

இதனையடுத்து புதிய சபாநாயகரால் சபை சிறிது நேரத்திற்கு ஒத்திவைக்கப்படும்.

இதனையடுத்து இன்று காலை 11.30 மணியளவில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது கொள்கை பிரகடண உரையை நிகழ்த்தவுள்ளார்.

நாட்டில் பலத்த மழைவீழ்ச்சி! வெளியான அறிவிப்பு

நாட்டில் பலத்த மழைவீழ்ச்சி! வெளியான அறிவிப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW