ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் உறுப்பினராக நலீம் தெரிவு
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக எம்.எஸ். நலீம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் இது தொடர்பான கடிதத்தைத் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
நலீம், ஏறாவூர் நகரசபையின் முன்னாள் முதல்வரான நலீம் அண்மையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைப் பெற்றுக் கொண்டார்.
தேசியப் பட்டியல்
இந்த நிலையில், நீண்ட கலந்தாலோசனைகளின் பின்னர் நலீமின் பெயரை தேசியப் பட்டியல் உறுப்புரிமைக்காக கட்சி பரிந்துரை செய்துள்ளது.
இதேவேளை, 10 ஆவது நாடாளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி முஹம்மத் ரிஸ்வி சாலி (Mohammad Rizvie Salih) நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |