வடக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சை பிரிவு ஸ்தாபிக்கப்பட வேண்டும்: ஆளுநர் பணிப்புரை

Sri Lanka Northern Province of Sri Lanka P. S. M. Charles
By Theepan Aug 09, 2024 03:14 AM GMT
Theepan

Theepan

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் அவசர சிகிச்சை பிரிவு ஸ்தாபிக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார்.

வடக்கு மாகாண சுகாதாரத்துறை தொடர்பான விசேட கலந்துரையாடல் மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று (08) நடைபெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர்! சுமந்திரனின் நிலைப்பாடு

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர்! சுமந்திரனின் நிலைப்பாடு


ஆளுநரின் பணிப்புரை

இதன்போது, மாகாண சுகாதார துறையில் காணப்படும் சிக்கல்கள், மேற்கொள்ள வேண்டிய பொறிமுறை மாற்றம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன், வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் அவசர சிகிச்சை பிரிவை ஸ்தாபிக்குமாறு மாகாண சுகாதார நிர்வாக அதிகாரிகளுக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளதுடன் அந்த பிரிவிற்கான ஆளணியை நியமித்து உரிய பயிற்சிகளை வழங்குமாறும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

வடக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சை பிரிவு ஸ்தாபிக்கப்பட வேண்டும்: ஆளுநர் பணிப்புரை | P S M Charles Meeting Jaffna

இதேவேளை, வைத்தியசாலைகளை ஒருங்கிணைப்பதற்கான தரவுப் பொறிமுறை ஒன்றை விரைவில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், சுகாதார துறைக்கு தேவையான ஆளணி, வளப்பற்றாக்குறை, தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கையை விரைவில் சமர்பிக்குமாறு மாகாண சுகாதார பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.

வடக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சை பிரிவு ஸ்தாபிக்கப்பட வேண்டும்: ஆளுநர் பணிப்புரை | P S M Charles Meeting Jaffna

ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் வடக்கு மாகாண சுகாதார நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

சமஷ்டியை வலியுறுத்தி துண்டுப்பிரசுரம் விநியோகம்

சமஷ்டியை வலியுறுத்தி துண்டுப்பிரசுரம் விநியோகம்

நாட்டின் சில பகுதிகளில் 12 மணித்தியால நீர் வெட்டு

நாட்டின் சில பகுதிகளில் 12 மணித்தியால நீர் வெட்டு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGallery