ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர்! சுமந்திரனின் நிலைப்பாடு
Sri Lankan Tamils
Tamils
M A Sumanthiran
M. A. Sumanthiran
By Mayuri
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்தியுள்ளமை முட்டாள்தனமான முடிவு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தள பதிவில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளதை ஏற்க முடியாது.
தமிழர் பிரச்சினை
இது முட்டாள்தனமான முடிவு. தமிழர் பிரச்சினையை பலவீனப்படுத்தும் செயலே இது.
தமிழர் பிரச்சினைகள் தொடர்பில் ஒரு செய்தியை வெளிப்படுத்துவதற்கான தேர்தல் இதுவல்ல. மாறாக சுயநிர்ணய உரிமைக்கான வாக்கெடுப்புமல்ல என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |