தலைவர் அஷ்ரபின் கனவை முழுமையாக நிறைவேற்றவில்லை..

Srilanka Muslim Congress Sri Lanka Politician Local government Election
By Rakshana MA Apr 22, 2025 12:30 PM GMT
Rakshana MA

Rakshana MA

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எம்.எச்.எம்.அஷ்ரப்பின் கனவை முழுமையாக நிறைவேற்றாத காரணத்தினால் தான் நாங்கள் அனைவரும் வெளியேறினோம் என ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கட்சியின் உப தலைவர் ஹக்கீம் செரீப் தெரிவித்துள்ளார்.

தலைவர் அஷ்ரப்பிற்கு தென்கிழக்கு அலகு ஒன்றை மாவட்டத்தில் உருவாக்க வேண்டும் என்ற அவருடைய ஆசை ஒன்று இருந்தது. அதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. 

தென்கிழக்கு அலகு மாவட்டம் ஒன்று அமைக்கப்பட வேண்டும், கரையோர மாவட்டம் என்றால் என்ன, நமக்கு ஏதாவது ஒன்றை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சென்றால் அம்பாரைக்கு தான் போக வேண்டும் சிங்களத்தில் பேச வேண்டும், சகோதர இனங்களுடன் இணைந்து தான் எதையும் செய்ய வேண்டும்.

இன்றையதினம் உச்சம் தொடும் தங்க விலை..!

இன்றையதினம் உச்சம் தொடும் தங்க விலை..!

கட்சிகளுக்கிடையிலான பிளவு

மர்ஹும் எம்.எச்.எம் அஷ்ரப் அப்படிப் போகத்தேவையில்லை நீங்கள் கரையோர மாவட்டத்திலே உங்களுக்கென்று ஒரு கச்சேரியை உருவாக்கி தருவோம் என்றார். ஆனால் இன்று அதுவும் இல்லை. இதன் காரணமாகத்தான் நாங்கள் ஒரு முடிவெடுத்து ஐக்கிய சமாதான கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கினோம்.

தலைவர் அஷ்ரபின் கனவை முழுமையாக நிறைவேற்றவில்லை.. | New Upa Candidate Hakeem Sharif Speech At Ampara

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து ஐக்கிய சமாதான கூட்டமைப்பு பிரிந்து உருவாக்கப்பட்ட கட்சி இதுவாகும். எதிர்வரும் தேர்தலில் இலங்கையின் பல மாவட்டங்களில் இந்த ஐக்கிய சமாதான கூட்டமைப்பு களமிறங்கி இருக்கின்றது.

இந்த ஐக்கிய சமாதான கூட்டமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து பிரிந்ததற்கான காரணம் மர்ஹூம் எம்.எச்.சம்.அஷ்ரப் இருந்த காலத்தில் தாய்மார்களுக்கும் இளைஞர்களுக்கும் என்ன செய்ய நினைத்தாரோ அது எதுவும் தற்போது நடைபெறவில்லை.

அதாவது இப்போது அக்கட்சியில் இருக்கின்ற தலைமையினால் எதுவும் செய்ய முடியாத காரணத்தினால் தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து நாங்கள் பிரிந்தோம்.அது உங்கள் அனைவருக்கும் தெரியும் என்று நினைக்கின்றேன்.

மூதூரில் வாய்க்காலுக்குள் தடம் புரண்டு வீழ்ந்த கார்

மூதூரில் வாய்க்காலுக்குள் தடம் புரண்டு வீழ்ந்த கார்

நிறைவேற்றப்படாத கனவுகள் 

கட்சியின் செயலாளர் நாயகம் ஹசன் அலி, கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இருக்கின்ற போது தலைவர் எம்.எச்.எம் அஷ்ரபுடன் நெருங்கி செயல்பட்டவர்.

அது போன்று எமது கட்சி தவிசாளர் பசீர் சேகு தாவூத் கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு எதையும் சாதிக்க முடியாது என்று கூறி அக்கட்சியில் இருந்து வெளியேறி விட்டார். அதைத் தொடர்ந்து நாங்களும் அந்த கட்சியில் இருந்து வெளியேறினோம்.

தலைவர் அஷ்ரபின் கனவை முழுமையாக நிறைவேற்றவில்லை.. | New Upa Candidate Hakeem Sharif Speech At Ampara

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எம்.எச்.எம்.அஷ்ரப்பின் கனவை முழுமையாக நிறைவேற்றாத காரணத்தினால் தான் நாங்கள் அனைவரும் வெளியேறினோம். இது தான் உண்மை.

அந்த கனவில் தென்கிழக்கு அலகு ஒன்றை மாவட்டத்தில் உருவாக்க வேண்டும் என்ற அவருடைய ஆசை ஒன்று இருந்தது. அதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

இன்று இந்த ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கொழும்பு மாவட்டத்திலும் புத்தளம் மாவட்டத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் எமது கட்சி சார்பில் இந்த தேர்தலில் பல ஆசனங்களை வெற்றி பெறச்செய்வோம்.

மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி

மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி

மக்களின் ஆதரவு

அதனை தொடர்ந்து அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு பிரதேச சபையில் இரண்டு ஆசனங்களை கைப்பற்றுவதற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கின்றோம்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்தவர்கள் இதுவரை என்ன செய்திருக்கின்றார்கள். அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இருந்தவர்கள் எதைச் செய்தார்கள். அவர்கள் உங்களுக்கு ஏதாவது ஒன்றை செய்திருந்தால் இங்கு நாங்கள் வரத் தேவையில்லை.

உங்களது பெறுமதியான வாக்குகளை அவர்களுக்கு வழங்கி விட்டு இன்று எதை சாதித்து இருக்கிறீர்கள். எதையுமே சாதிக்கவில்லை. நாங்கள் எமது கட்சியின் சார்பாக இன்று இளைய தலைமுறைக்கு இடம் கொடுத்துள்ளொம். இந்த வட்டாரத்திற்கு ஒரு இளைஞனை களமிறக்கி இருக்கின்றோம்.  

தலைவர் அஷ்ரபின் கனவை முழுமையாக நிறைவேற்றவில்லை.. | New Upa Candidate Hakeem Sharif Speech At Ampara

நாளை அந்த சாஜித் என்ற இளைஞன் காரைதீவு சபையில் இருக்கின்ற போது உங்களுக்காக குரல் கொடுப்பார். எனவே நீங்கள் அவரை ஆதரிக்க வேண்டும். நாங்கள் கூறி உங்களுக்கு அவரை தெரிய வேண்டியது இல்லை. அவர் உங்களுடன் இருப்பவர்.

நாங்கள் எதிர்வரும் தேர்தலில் இரண்டு ஆசனங்களை காரைதீவு பிரதே சபையில் பெற்றுக்கொள்வது உங்கள் கைகளில் தான் இருக்கின்றது என்று கூறியுள்ளார்.

மேலும், இந்நிகழ்வில் வட்டாரங்களின் வேட்பாளர்கள் கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

தேர்தல் தொடர்பில் அதிகரிக்கும் முறைப்பாடுகள் : வெளியான தகவல்

தேர்தல் தொடர்பில் அதிகரிக்கும் முறைப்பாடுகள் : வெளியான தகவல்

நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் நோய்த்தாக்கம்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் நோய்த்தாக்கம்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

      நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW