தேர்தல் தொடர்பில் அதிகரிக்கும் முறைப்பாடுகள் : வெளியான தகவல்
Sri Lanka Police
Sri Lankan Peoples
Crime
Local government Election
By Rakshana MA
இலங்கையில் எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு சட்டவிதி மீறல்கள் அதிகரித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழ (Sri Lanka Election Commission) தெரிவித்துள்ளது.
அதன்படி, கடந்த மார்ச் 20ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 19ஆம் திகதி வரையான காலப்பகுதியில் தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மொத்தமாக 1,874 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
முறைப்பாடுகள்
இந்நிலையில், தேர்தல் சட்டவிதிமுறை மீறல் தொடர்பாக கடந்த 19ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழுவுக்கு 162 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இருப்பினும், மொத்த தேர்தல் முறைப்பாடுகளில் 1,607 முறைப்பாடுகளுக்கு இதுவரை தீர்வு காணப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |