நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் நோய்த்தாக்கம்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Sri Lanka Sri Lankan Peoples Dengue Prevalence in Sri Lanka Public Health Inspector
By Rakshana MA Apr 20, 2025 09:10 AM GMT
Rakshana MA

Rakshana MA

தற்போது பெய்து வரும் மழையால் டெங்கு மற்றும் சிக்குன்குனியா பரவும் அபாயம் அதிகம் இருப்பதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துகுட, டெங்குவை பரப்பும் நுளம்புகள் மூலமாகவும் சிக்குன்குனியா பரவுகிறது என்று கூறியுள்ளார்.

இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் புகைப்பட ஊடகவியலாளர் குடும்பத்துடன் பலி

இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் புகைப்பட ஊடகவியலாளர் குடும்பத்துடன் பலி

நோய் பரவல்

நீண்ட வார இறுதி விடுமுறை மற்றும் பாடசாலை விடுமுறை காரணமாக, பலர் சுற்றுலா சென்றுள்ளதாகவும், தங்கள் வீடுகளையும் சுற்றுப்புறத்தையும் சுத்தம் செய்யும் வாய்ப்பை இழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக, நுளம்புகள் பெருகும் இடங்களை சுத்தம் செய்யும் வாய்ப்பு காணப்படாததால், அவை அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் நோய்த்தாக்கம்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Dengue And Chikungunya Deases In Sri Lanka

அத்துடன், டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்கள் ஒரே நுளம்பால் பரவுகின்றன, இதன் காரணமாக, சுற்றுப்புறத்தை தொடர்ந்து சுத்தம் செய்வதன் மூலம் நுளம்பு பெருக்கத்தைத் தடுக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வீழ்ச்சியடையும் பிரதான ஏற்றுமதி பயிர்களின் உற்பத்தி..!

வீழ்ச்சியடையும் பிரதான ஏற்றுமதி பயிர்களின் உற்பத்தி..!

காரைதீவு பகுதியில் திடீர் சோதனை : சிக்கிய நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுகள்

காரைதீவு பகுதியில் திடீர் சோதனை : சிக்கிய நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுகள்

      நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW