மாணவர்களுக்கான கொடுப்பனவுத் தொகை தொடர்பில் வெளியான அறிவித்தல்

Sri Lanka Sri Lankan Peoples Money
By Rakshana MA Mar 12, 2025 09:27 AM GMT
Rakshana MA

Rakshana MA

சுரக்ஷா வாரத்தை முன்னிட்டு சுரக்ஷா அட்டைகளை விநியோகிக்கும் மற்றும் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் தேசிய நிகழ்வு, பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றுள்ளது.

இதன்படி, அரச பாடசாலைகள், அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களில் 1 முதல் 13ஆம் வகுப்பு வரை படிக்கும் 5 முதல் 21 வயது வரையிலான மாணவர்கள் மற்றும் உதவி பெறும் விசேட பாடசாலைகளில் படிக்கும் 4 முதல் 21 வயது வரையிலான 40 இலட்சம் மாணவர்கள் வரை ‘சுரக்ஷா’ மாணவர் காப்பீட்டுத் திட்டத்தை கல்வி அமைச்சு மற்றும் இலங்கை இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஜென்ரல் லிமிடெட் ஆகியவை இணைந்து செயல்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளது.

மதங்களை ஒன்றிணைக்க மன்னாரில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை

மதங்களை ஒன்றிணைக்க மன்னாரில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை

சுரக்ஷா திட்டம் 

கடந்த 2024 ஜூலை முதல் 3 ஆண்டுகளுக்கு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று உரிய நிறுவனங்கள் இணங்கியுள்ளன. இதற்காக அரசாங்கம் 7112 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது.

மாணவர்களுக்கான கொடுப்பனவுத் தொகை தொடர்பில் வெளியான அறிவித்தல் | National Event For Suraksha Cards Awareness

இதன்படி, அந்த குழந்தைகளுக்கு சுகாதார காப்பீடு, விபத்துக் காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மாணவர்கள் பின்வரும் பலன்களை பெறலாம்.

சுகாதாரக் காப்பீடு உள்நோயாளிகளுக்கான பலன்கள் – ரூ.300,000/= (அரச/ தனியார் மருத்துவமனைகள்) வெளிநோயாளிகளுக்கான பலன்கள் ரூ.20,000/= தீவிர நோய்களுக்கான பலன்கள் ரூ.1,500,000/= விபத்துக் காப்பீடு முழு நிரந்தர இயலாமைக்கு – ரூ.200,000/= நிரந்தர பகுதி இயலாமைக்கு – ரூ.150,000/= தற்காலிக இயலாமைக்கு ரூ.25,000/= முதல் ரூ.100,000/= வரை பெற்றுக்கொள்ளலாம்.

கந்தளாய் குளத்தின் நான்கு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன

கந்தளாய் குளத்தின் நான்கு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன

காப்பீட்டு திட்டம் 

அத்துடன், ஆயுள் காப்பீடானது, ஆண்டு வருமானம் ரூ.180,000/=க்குக் குறைவான வருமானம் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும், ‘அஸ்வசும்’ திட்டத்தின் கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் பெற்றோர்/ சட்டப்பூர்வ பாதுகாவலர் இறந்தால், மாணவர்களுக்கு தலா ரூ.75,000/= வழங்கப்படும்.

மாணவர்களுக்கான கொடுப்பனவுத் தொகை தொடர்பில் வெளியான அறிவித்தல் | National Event For Suraksha Cards Awareness

இந்நிலையில், ஒரு மரணத்திற்கு ஒதுக்கப்படும் அதிகபட்ச தொகை ரூ.225,000/= ஆகும், மேலும் அந்த தொகை குடும்பத்தில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் சமமாக ஒதுக்கப்படும். இரண்டு பெற்றோர்கள் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரின் இறப்புக்கு இந்த காப்பீடு தனித்தனியாக வழங்கப்படும்.

மேலும், இந்தத் திட்டத்தின் மூலம் பலன்களைப் பெற, உரிமைகோரல் படிவம் மற்றும் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் பாடசாலை அதிபர் சான்றளித்து இலங்கை இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஜெனரல் லிமிடெட்டின் https://www.srilankainsurance.lk/suraksha/ இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.  

இறக்குமதியான வாகனங்கள் மீள் ஏற்றுமதியா..! வெளியான பின்புலம்

இறக்குமதியான வாகனங்கள் மீள் ஏற்றுமதியா..! வெளியான பின்புலம்

முஸ்லிம் எம்.பிக்களுடன் சபையில் கடும் வாக்குவாதம் செய்த அர்ச்சுனா

முஸ்லிம் எம்.பிக்களுடன் சபையில் கடும் வாக்குவாதம் செய்த அர்ச்சுனா

           நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW