ஹர்த்தாலை ஆதரிக்கும் வகையில் வெளியான அறிக்கை

Mullaitivu Strike Sri Lanka Eastern Province Death
By Rakshana MA Aug 16, 2025 11:32 AM GMT
Rakshana MA

Rakshana MA

முல்லைத்தீவில் (Mullaitivu) அண்மையில் இடம்பெற்ற படுகொலை, இலங்கை இராணுவ உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

பொதுமக்களை பாதுகாக்க வேண்டிய படைகள் தாமே சட்டமும் ஒழுங்கும் இழந்து இப்படிப்பட்ட கொடூரச் செயல்களைச் செய்வது, இந்த நாட்டின் சட்ட நடைமுறையாக்கத்தின் ஆழமான சீர்கேட்டை வெளிப்படுத்துகிறது.

இப்படிப்பட்ட குற்றங்களுக்கு பொறுப்பேற்க செய்வதில் அரசின் இயலாமை, அல்லது விருப்பமின்மை, பொதுமக்களின் நம்பிக்கையை சிதைத்து, நிரபராதிகளின் உயிரை ஆபத்துக்குள்ளாக்கியுள்ளது.

நாட்டில் இதுவரை 4,712 சந்தேகநபர்கள் கைது!

நாட்டில் இதுவரை 4,712 சந்தேகநபர்கள் கைது!

ஹர்த்தால் 

இன்னும் ஒரு கவலைக்குரிய விடயம் என்னவெனில் அரசாங்கம் இஸ்ரேலிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா விலக்கு வழங்கும் போக்காகும்.

இவர்கள் பலர் காசாவில் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை மீறியதாக பரவலாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) உறுப்பினர்களே.

ஹர்த்தாலை ஆதரிக்கும் வகையில் வெளியான அறிக்கை | Mullaitivu Killings And Hartal Call

இந்த சூழ்நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை 18 ஆம் திகதி இலங்கைத் தமிழரசுக் கட்சி (ITAK) அறிவித்துள்ள ஹர்த்தாலை முழுமையாக ஆதரிக்க தீர்மானித்துள்ளது.

இது நீதி, பொறுப்புகூறல், மற்றும் இராணுவத்தினுள் நிலவும் தண்டனையற்ற சூழ்நிலைக்கு முடிவுகோரும் அமைதியான எதிர்ப்பாகும்.

வடகிழக்கில் உள்ள நமது முஸ்லிம் சகோதரர்களும், சகோதரிகளும், திங்கட்கிழமை 18 ஆம் தேதி குறைந்தபட்சம் காலை நேரத்தில் தங்கள் கடைகள் மற்றும் தொழில்களை மூடுவதன் மூலம் இந்த ஒற்றுமை போராட்டத்தில் இணையுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

தமிழ் மற்றும் முஸ்லிம் என அனைத்து சமூகங்களும் ஒன்றிணைந்து வன்முறையை நிராகரித்து, அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.

திருகோணமலை விவசாயிகள் நில மீட்பு போராட்டம்!

திருகோணமலை விவசாயிகள் நில மீட்பு போராட்டம்!

நிலுவையிலுள்ள கிழக்கு மாகாண சமூக சேவை தேர்வு!

நிலுவையிலுள்ள கிழக்கு மாகாண சமூக சேவை தேர்வு!

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW