நிலுவையிலுள்ள கிழக்கு மாகாண சமூக சேவை தேர்வு!
கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு மூலமாக சமூக சேவை உத்தியோகத்தர் தரம் - iii இற்கான திறந்த போட்டி பரீட்சை விண்ணப்பம் கோரப்பட்டு தற்போது மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில் போட்டி பரீட்சை நடாத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு விண்ணப்பிக்கும் போதே பரீட்சை கட்டணமும் செலுத்தப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேவேளை, இது தொடர்பில் எவ்வித அறிவித்தல்களும் அறிவிக்கப்படவில்லை என பரீட்சார்த்திகள் கவலை தெரிவிக்கின்றனர்.
தேர்வு நிலுவை
இது தொடர்பில் மாகாண பொது சேவை ஆணைக்குழுவுக்கு தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக விளக்கம் கோரப்பட்டுள்ள நிலையில், இதற்கான பதிலாக "நிதி அமைச்சினால் வெளியிடப்பட்ட 2020.02.25 ஆம் திகதிய 01/2020 ஆம் இலக்க முகாமைத்துவ சேவைகள் சுற்றரிக்கை மற்றும் 2022.04.26 ஆம் திகதிய 03/2022 ஆம் இலக்க தேசிய வரவு செலவு திட்ட சுற்று நிரூபத்துக்கு அமைவாக நியமனங்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கில் உள்ள பிரதேச செயலகங்களில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் சமூக சேவை உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் நிலவி வருவதுடன் இதனை இழுத்தடிப்பு செய்தும் வருகின்றனர்.
மேலும், இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுனர் மற்றும் துறைசார் உயர் அதிகாரிகள் கவனம் செலுத்தி இப்போட்டி பரீட்சையை விரைவில் நடாத்துமாறு விண்ணப்பதாரிகள் கோரிக்கை விடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |