பாகிஸ்தானில் வெள்ளம்: 24 மணித்தியாலங்களில் 240 பேர் பலி

Pakistan Climate Change World
By Rakshana MA Aug 16, 2025 05:00 AM GMT
Rakshana MA

Rakshana MA

வடக்கு பாகிஸ்தானில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்குகளால் கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தது 243 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் நேற்று (15) வெள்ளிக்கிழமை மாத்திரம் வடமேற்கு புனர் மாவட்டத்தில் 157 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், பெருமளவான மக்கள் இன்னும் காணவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாளில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட முறைப்பாடுகள்! பொலிஸார் குறித்து அதிர்ச்சி தகவல்

ஒரே நாளில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட முறைப்பாடுகள்! பொலிஸார் குறித்து அதிர்ச்சி தகவல்

பாகிஸ்தானில் வெள்ளம்

அதேவேளை, மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் பாகிஸ்தானிய தகவல்கள் கூறுகின்றன.

நேற்று வெள்ளிக்கிழமை நண்பகல் வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 78 உடல்கள் மீட்கப்பட்டதாகவும், பின்னர் இடிந்து விழுந்த வீடுகள் மற்றும் வெள்ளத்தில் மூழ்கிய கிராமங்களின் இடிபாடுகளில் இருந்து மேலும் 79 பேர் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் வெள்ளம்: 24 மணித்தியாலங்களில் 240 பேர் பலி | Pakistan Floods And Landslides Deaths

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் பொதுமக்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் பொதுமக்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை

தேசிய மீலாத் தின நிகழ்வு குறித்து அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

தேசிய மீலாத் தின நிகழ்வு குறித்து அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW