வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும்!
வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும் எனவும் முல்லைத்தீவில் இளைஞர் இராணுவத்தினரால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமையை கண்டித்தும், செம்மணி புதைகுழிக்கு நீதியான விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தியும் மட்டக்களப்பில் நேற்று (13) கவனவீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆனந்த விஜயபாலவின் வருகையை முன்னிட்டு மட்டக்களப்பு நகரத்தின் காந்தி பூங்கா முன்றலில் இந்தக் கவனவீர்ப்பு நடைபெற்றது.
போராட்டம்
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அழைப்பின் பேரில் நடந்த இந்தப் போராட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.சிறீநேசன், இ.சிறிநாத், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் சிவில் செயல்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருமளவிலானோர் பங்கேற்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |