எந்தவொரு செயற்கை கோளும் இலங்கையின் பெயரில் இல்லை!
தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் தொடர்பான சர்வதேச ஒருங்கிணைப்புக்குப் பொறுப்பான ஐக்கிய நாடுகள் சபையின் முகவர் நிறுவனமான சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் கீழ், இலங்கை என்ற பெயரில் எந்தவொரு செயற்கைக்கோளும் பதிவு செய்யப்படவில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்தார்.
சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் உறுப்பினரான இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுக்கு இரண்டு புவிசார் சுற்றுப்பாதை நிலைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலைகள் இலங்கைக்கு ஒதுக்கப்பட்டிருந்தாலும், ஆப்கானிஸ்தான், கிர்கிஸ்தான், மோல்டோவா, நேபாளம், தஜி கிஸ்தான் மற்றும் ருமேனியா போன்ற பிற நாடுகளும் அவற்றில் தடையின்றி செயல்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெயர் பதிவு
எவ்வாறாயினும், சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் தரவுகளின்படி, இந்த சுற்றுப்பாதை நிலைகளில் "இலங்கை" என்ற பெயரில் எந்தவித செயற்கைக்கோளும் தற்போது இல்லை.
சுப்ரீம்செட் நிறுவனம், "சுப்ரீம்செட்-1" என்ற பெயரில் செயற்கைகோளை ஏவியதாகவும், பின்னர் அதனை "சைனா செட்-12" என பெயர் மாற்றம் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.
எனினும், இலங்கையின் நிலைகளின் கீழ், சர்வதேச தொலைதொடர்பு ஒன்றியத்தின் தரவுத்தளத்தில் குறித்த எந்த பெயரிலும் செயற்கை கோள்களும் இல்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |