பொலிஸ்மா அதிபரிடம் நேரடியாக முறைப்பாடளிக்க வட்ஸ்அப் இலக்கம்

Sri Lanka Police WhatsApp Crime
By Rakshana MA Aug 14, 2025 05:39 AM GMT
Rakshana MA

Rakshana MA

குற்றங்கள் மற்றும் பிற பிரச்சனைகள் குறித்து பொதுமக்கள் நேரடியாக பொலிஸ்மா அதிபருக்கு முறைப்பாடளிப்பதற்கு இலங்கை பொலிஸ் பிரத்தியேக வட்ஸ்அப் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.

பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்படவுள்ள பிரியந்த வீரசூரியவினால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த முயற்சி, பொது மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பதையும், குடிமக்களும் பொலிஸ் அதிகாரிகளும் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்துடன் நேரடியாக தகவல்களைப் பகிர்ந்துகொள்ள அனுமதிப்பதன் மூலம் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

முட்டை சார்ந்த உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு! வெளியான தகவல்

முட்டை சார்ந்த உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு! வெளியான தகவல்

குற்றச்செயல்கள்

அதன்படி, 071-8598888 என்ற புதிய வட்ஸ்அப் எண் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. குற்றங்கள் அல்லது பொலிஸ்மா அதிபரின் அவதானம் தேவைப்படும் பிற விடயங்கள் தொடர்பான குறுஞ்செய்திகள், படங்கள் மற்றும் காணொளிகளை அனுப்புவதற்கு இந்த எண்ணை பயன்படுத்த முடியும்.

பொலிஸ்மா அதிபரிடம் நேரடியாக முறைப்பாடளிக்க வட்ஸ்அப் இலக்கம் | Sri Lanka Police Whatsapp Service

இருப்பினும், இந்த எண்ணுக்கு வரும் தொலைபேசி அழைப்புகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கல்முனை மாநகர சபை வீதி வியாபாரிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

கல்முனை மாநகர சபை வீதி வியாபாரிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

80 துப்பாக்கி சூடு சம்பவங்களில் 44 பேர் பலி

80 துப்பாக்கி சூடு சம்பவங்களில் 44 பேர் பலி

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW