நாட்டில் இதுவரை 4,712 சந்தேகநபர்கள் கைது!

Sri Lanka Police Sri Lanka Sri Lankan Peoples Crime
By Rakshana MA Aug 16, 2025 07:50 AM GMT
Rakshana MA

Rakshana MA

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் 4 ஆயிரத்து 712 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், இராணுவம், கடற்படையினர் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இதன்போது, பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் ஆதாரங்களுடன் 13 பேரும் சந்தேகத்தின் பேரில் 616 பேரும் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 265 பேரும், திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 161 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் வெள்ளம்: 24 மணித்தியாலங்களில் 240 பேர் பலி

பாகிஸ்தானில் வெள்ளம்: 24 மணித்தியாலங்களில் 240 பேர் பலி

கைது நடவடிக்கை

மேலும், மதுபோதையில் வாகனங்களை செலுத்தியமை தொடர்பில் 72 சாரதிகளும், கவனக்குறைவாக வாகனங்களை செலுத்தியமை தொடர்பில் 18 சாரதிகளும் ஏனைய போக்குவரத்து விதி முறைகளை மீறியமை தொடர்பில் 3,567 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

நாட்டில் இதுவரை 4,712 சந்தேகநபர்கள் கைது! | Sri Lanka Nationwide Police Arrests

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் பொதுமக்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் பொதுமக்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை

கிழக்கு மாகாண சுகாதாரத்துறைக்கு பெருந்தொகை நிதி ஒதுக்கீடு

கிழக்கு மாகாண சுகாதாரத்துறைக்கு பெருந்தொகை நிதி ஒதுக்கீடு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW