திருகோணமலை விவசாயிகள் நில மீட்பு போராட்டம்!
திருகோணமலையில் (Trincomalee) விவசாய நிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கும் அபிவிருத்தித் திட்டங்களுக்காக வனநிலங்களை ஆக்கிரமிப்பதற்கும் எதிராக ஜனாதிபதி செயலகம் முன்பாக போராட்டம் நடத்தப்பட்டது.
சுமார் 50 ஆண்டுகளாக பயிரிடப்பட்ட 800 ஏக்கர் விவசாய நிலங்களை விவசாயிகளிடமிருந்து வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்தி, அவற்றை தனியார் நிறுவனங்களுக்கு மாற்றுவதற்கு எதிராக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் பொலிஸாரின் தலையீட்டை தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
நில மீட்பு போராட்டம்
எனினும், சிறிது நேரத்திலேயே அமைதி ஏற்பட்டது. விவசாயிகளின் பிரச்னை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாட பல்வேறு சந்தர்ப்பங்களில் முயற்சித்த போதிலும் அனுமதிகிட்டவில்லை.
இரு வாரங்களுக்கு முன்னர் இது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டது.
தீர்வு வழங்குவதாக உறுதியளித்த போதிலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் இந்தப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக மக்கள் போராட்ட கூட்டணியின் வசந்த முதலிகே தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

