தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு மருத்துவ பீடம் : முன்வைக்கப்பட்ட கோரிக்கை
தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கான மருத்துவ பீடமொன்றை அமைப்பதற்காக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர்(Ashraff Thahir) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம்(20) நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்ட வாசிப்பின் மீதான விவாதங்களின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பல்கலைக்கழகத்திற்கு இது நீண்டநாள் தேவையாக காணப்படும் நிலையில், மருத்துவ பீடமொன்றை அமைப்பதற்காக ஒவ்வொரு அரசாங்கத்திடமும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.
புதிய பீடங்களை நிறுவுதல்
இந்த நிலையில், கடந்த அரசாங்கங்களைப் போன்று இந்த அரசாங்கமும் இருக்கக்கூடாது. இந்த விடயத்தில் கூடுதல் கவனமெடுத்து செயல்பட வேண்டும்.
அத்துடன், தென்கிழக்கு பல்கலைக்கழகம் அமைந்திருக்கும் பிரதேசம் விவசாயத்துக்கு பெயர் போன இடமாக காணப்படுவதனால் இப்பல்கலைக்கழகத்துக்கு விவசாய பீடமொன்றை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
மேலும், குறித்த வரவு - செலவுத்திட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு கிழக்கு மாகாணத்தின் தேவைகளை நிவர்த்திக்கும் வகையில் அதிக ஒதுக்கீடுகளை செய்து தரவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |