நெல் களஞ்சியம் தொடர்பில் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
நாட்டில் தற்போது விவசாயிகளால் அரசாங்கத்திற்கு கொடுக்கப்படும் நெல்லின் அளவு குறைவடைந்துள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்துள்ளார்.
அத்துடன், தற்போதைய காலப்பகுதியில் அறுவடை செய்யப்படும் பிரதேசங்களில் உள்ள நெல் களஞ்சியசாலைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நெல் கொள்முதல்
இந்த நிலையில், சந்தையில் இன்னும் குறைந்த அளவிலேயே நெல் காணப்படுவதாகவும், எதிர்வரும் நாட்களில் அதிகளவு நெல் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாகவும், அதற்குள் சபைக்கு நெல் கையிருப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், நெல் கொள்முதல் செய்வதற்காக அரசாங்கம் இதுவரை ஐந்து பில்லியன் ரூபாயை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |