முஸ்லிம் காங்கிரஸில் இடைநிறுத்தப்பட்ட மௌலானா எம்.பி: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Srilanka Muslim Congress Ranil Wickremesinghe Law and Order
By Laksi Aug 28, 2024 03:36 PM GMT
Laksi

Laksi

அலி சாஹிர் மௌலானாவை முஸ்லிம் காங்கிரஸில் இருந்து நீக்க முடியாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு பிரதம மாவட்ட நீதிமன்றம் இன்று (28) இந்த இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கியதையடுத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிருந்து இடைநிறுத்தப்பட்டார்.

அம்பாறையில் ஹக்கீம், ரிஷாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுவரொட்டிகள்

அம்பாறையில் ஹக்கீம், ரிஷாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுவரொட்டிகள்

இடைக்கால தடையுத்தரவு

இந்நிலையில் இது தொடர்பில் விளக்கம் கொடுக்க அலி சாஹிர் மௌலானாவுக்கு ஒருவார கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், அந்த ஒரு வார காலம் இன்று இரவு 12 மணி வரையில் இருந்தாலும் இன்றைய தினமே முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடம் கிழக்குப் பகுதியில் ஒரு இடத்தில் ஒன்று கூடி அலி சாஹிர் மௌலானாவை கட்சியில் இருந்து நீக்க நடவடிக்கைகளை எடுத்திருந்ததாக கூறப்படுகின்றது.

முஸ்லிம் காங்கிரஸில் இடைநிறுத்தப்பட்ட மௌலானா எம்.பி: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Maulana Muslim Congress Supreme Court Order

எவ்வாறாயினும் அலி சாஹிர் மௌலானாவை கட்சியின் பதவியில் இருந்து நீக்க முடியாது என்றும் அவருடைய அங்கத்துவத்தை நீக்க முடியாது என்றும் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக அலி சாஹிர் மௌலானா தரப்பு மேற்கொண்ட முறைப்பாட்டின் மூலம் இந்த உத்தரவு பெறப்பட்டுள்ளது.

கல்முனை தேர்தல் தொகுதியின் செயற்குழு தலைவராக ஹரீஸ் எம்.பி நியமனம்

கல்முனை தேர்தல் தொகுதியின் செயற்குழு தலைவராக ஹரீஸ் எம்.பி நியமனம்

அம்பாறையில் தபால் மூல வாக்கு சான்றிதழ் தொடர்பில் பயிற்சித் திட்டம்

அம்பாறையில் தபால் மூல வாக்கு சான்றிதழ் தொடர்பில் பயிற்சித் திட்டம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW