கல்முனை தேர்தல் தொகுதியின் செயற்குழு தலைவராக ஹரீஸ் எம்.பி நியமனம்

Sajith Premadasa Kalmunai Sri Lanka Presidential Election 2024
By Laksi Aug 28, 2024 07:36 AM GMT
Laksi

Laksi

கல்முனை தேர்தல் தொகுதியின் செயற்குழு தலைவராக நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசவின் அமோக வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் கல்முனை தேர்தல் தொகுதி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வானது நேற்று (27) மருதமுனை தனியார் விடுதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி ரவூப் ஹக்கீமின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

முதலாவதாக வருபவர்களுக்கு முன்னுரிமை! கடவுச்சீட்டு விநியோகம் குறித்து வெளியான தகவல்

முதலாவதாக வருபவர்களுக்கு முன்னுரிமை! கடவுச்சீட்டு விநியோகம் குறித்து வெளியான தகவல்

பிரசார நடவடிக்கைகள்

இதன்போது, சஜித் பிரேமதாசாவின் கல்முனை தொகுதியில் வெற்றியை உறுதிப்படுத்தும் வேலைத்திட்டங்கள், பிரசார நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.

கல்முனை தேர்தல் தொகுதியின் செயற்குழு தலைவராக ஹரீஸ் எம்.பி நியமனம் | Leader Of Kalmumai Constituency For H M M Harees

இந்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை முன்னாள் உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச அமைப்பாளர்கள், வேட்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வெளிநாட்டிலிருந்து வந்தவர் வவுனியாவில் கொலை: சந்தேகநபர்கள் இருவர் கைது

வெளிநாட்டிலிருந்து வந்தவர் வவுனியாவில் கொலை: சந்தேகநபர்கள் இருவர் கைது

சமூக ஊடகங்களில் போலி விளம்பரங்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சமூக ஊடகங்களில் போலி விளம்பரங்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW