அம்பாறையில் ஹக்கீம், ரிஷாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுவரொட்டிகள்

Ampara Risad Badhiutheen Sajith Premadasa Sri Lanka Presidential Election 2024
By Laksi Aug 28, 2024 08:38 AM GMT
Laksi

Laksi

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் ஆகியோருக்கு எதிர்ப்பு தெரிவித்து கிழக்கில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பல்வேறு பகுதிகளில் இவ்வாறான சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.

இதன்போது, ஏமாற்றுத் தலைமைகள் ஹக்கீம், ரிஷாட் கிழக்கு மண்ணுக்கு வேண்டாம் என்ற தலைப்பில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

முதலாவதாக வருபவர்களுக்கு முன்னுரிமை! கடவுச்சீட்டு விநியோகம் குறித்து வெளியான தகவல்

முதலாவதாக வருபவர்களுக்கு முன்னுரிமை! கடவுச்சீட்டு விநியோகம் குறித்து வெளியான தகவல்

சுவரொட்டிகள் 

அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பல்வேறு பகுதிகளில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்க அம்பாறை மாவட்டம் மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிர்ப்புகள் எழுந்த வண்ணமுள்ளன.

அம்பாறையில் ஹக்கீம், ரிஷாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுவரொட்டிகள் | Hakeem Rishad Dont Want To Go To Eastern Soil

ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தமது ஆதரவினை சஜித் பிரேமதாசவுக்கு வழங்கியிருந்தனர்.

இந்நிலையில், குறித்த சுவரொட்டிகள் கிழக்கு மாகாணத்தில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டிலிருந்து வந்தவர் வவுனியாவில் கொலை: சந்தேகநபர்கள் இருவர் கைது

வெளிநாட்டிலிருந்து வந்தவர் வவுனியாவில் கொலை: சந்தேகநபர்கள் இருவர் கைது

அம்பாறையில் ஹக்கீம், ரிஷாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுவரொட்டிகள் | Hakeem Rishad Dont Want To Go To Eastern Soil

சமூக ஊடகங்களில் போலி விளம்பரங்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சமூக ஊடகங்களில் போலி விளம்பரங்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW