மட்டக்களப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

Sri Lanka Police Batticaloa Crime
By Laksi Dec 24, 2024 06:00 AM GMT
Laksi

Laksi

மட்டக்களப்பு (Batticaloa) - கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முனைக்காட்டுப் பிரதேசத்தில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது.

மாவட்ட குற்ற விசாரணை பிரிவு நடாத்திய திடீர் சுற்றி வளைப்பின் போது குறித்த கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் மா அதிபரின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலிரத்னவின் ஆலோசனையில் மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி எம்.திலங்காவலவின் தலைமையிலான பொலிஸார் இத்திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

சேதமடைந்த வீதிகளை புனரமைப்பு செய்யும் பணிகளை விரைவுபடுத்துங்கள் - ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை

சேதமடைந்த வீதிகளை புனரமைப்பு செய்யும் பணிகளை விரைவுபடுத்துங்கள் - ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை

மேலதிக விசாரணை

குறித்த சுற்றிவளைப்பின்போது 3 பொருள்களில் 540000 மில்லி லீற்றர், 70000 மில்லி லீற்றர் கசிப்பு என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

மட்டக்களப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை | Massive Leak Plant Siege In Batticaloa

கைப்பற்றப்பட்ட பொருட்களோடு, சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதுடன் இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

பாலமுனை வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

பாலமுனை வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW