மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

Batticaloa TNA Shanakiyan Rasamanickam Hospitals in Sri Lanka Eastern Province
By Laksi Dec 24, 2024 03:36 AM GMT
Laksi

Laksi

மட்டக்களப்பு (Batticaloa) போதனா வைத்தியசாலையில் நிலவும் பல்வேறு குறைபாடுகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கான விசேட கலந்துரையாடலொன்று நடாத்தப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் போதனா வைத்தியசாலையில் நேற்றையதினம் (23) நடாத்தியுள்ளனர்.

இதன்போது, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தொடர்பில் அண்மைக்காலமாக சமூக ஊடகங்களில் முன்வைக்கப்படும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

கலந்துரையாடல்

அத்துடன், போதனா வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பிலும் நிர்வாக சிக்கல்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் | Discussion On Shortcomings Batti Teaching Hospital

மேலும், எதிர்காலத்தில் அவற்றினை நிவர்த்தி செய்வதற்கும் முடியாத பிரச்சினைகளை சுகாதார அமைச்சு மட்டத்தில் கொண்டு சென்று கலந்துரையாடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில்  நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், இ.சிறிநாத் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

சம்மாந்துறையில் கசிப்பு நிலையம் முற்றுகை : அதிரடிப்படை சுற்றிவளைப்பு

சம்மாந்துறையில் கசிப்பு நிலையம் முற்றுகை : அதிரடிப்படை சுற்றிவளைப்பு

கல்முனையில் போதைப்பொருளுடன் கைதான 24 வயது இளைஞர்கள்

கல்முனையில் போதைப்பொருளுடன் கைதான 24 வயது இளைஞர்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW