கல்முனையில் போதைப்பொருளுடன் கைதான 24 வயது இளைஞர்கள்

Ampara Eastern Province Crime
By Rakshana MA Dec 23, 2024 08:34 AM GMT
Rakshana MA

Rakshana MA

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை புற நகர் பகுதியில் ஐஸ் போதைப்பொருட்களை வாடகை வாகனம் ஒன்றின் ஊடாக விநியோகித்த இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரு நபர்களை எதிர்வரும் 31ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

குற்றவியல் விசாரணை தொடர்பில் அநுரகுமாரவுக்கு விசேட கடிதம்

குற்றவியல் விசாரணை தொடர்பில் அநுரகுமாரவுக்கு விசேட கடிதம்

சோதனை...

குறித்த பகுதியில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு சந்தேகத்திற்கிடமாக சென்ற வேன் ஒன்றினை பின்தொடர்ந்த பொலிஸார் குறித்த வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது அந்த வாகனத்தில் ஒரு தொகுதி ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் அதில் பயணம் செய்த 24 வயது மதிக்கத்தக்க இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்முனையில் போதைப்பொருளுடன் கைதான 24 வயது இளைஞர்கள் | 24 Year Old Youth Arrested With Drugs In Kalmunai

அத்துடன் வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட குறித்த வேன் மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்களான மருதமுனை பகுதியை சேர்ந்த இரு சந்தேக நபர்களும் நேற்று(22) மாலை கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

மேலும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆந் திகதி வரை இரு சந்தேக நபர்களையும் விளக்கமறியலில வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டதுடன் மேலதிக விசாரணைகளை பெரிய நீலாவணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

பிரேசில் விமான விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் மரணம்

பிரேசில் விமான விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் மரணம்

நாடளாவிய ரீதியில் சோதனையிடப்படவுள்ள வாகனங்கள்

நாடளாவிய ரீதியில் சோதனையிடப்படவுள்ள வாகனங்கள்

     நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGallery