நாடளாவிய ரீதியில் சோதனையிடப்படவுள்ள வாகனங்கள்

Sri Lanka Police Sri Lankan Peoples Transport Fares In Sri Lanka Festival Priyantha Weerasooriya
By Rakshana MA Dec 23, 2024 05:04 AM GMT
Rakshana MA

Rakshana MA

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு, பயணிகள் பேருந்துகள் மற்றும் ஏனைய வாகனங்களை சோதனை செய்யும் விசேட  நடவடிக்கை இன்று(23) முதல் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 

கடந்த சில நாட்களாக பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் உள்ளிட்ட வாகன விபத்துக்களை கருத்தில் கொண்டு இந்த போக்குவரத்து திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய(Priyantha Weerasoorya) பணிப்புரை விடுத்துள்ளார்.

இங்கு முக்கியமாக பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் சோதனை செய்யப்பட்டு சாரதிகள் மது போதையில் வாகனம் ஓட்டுகிறார்களா என பரிசோதிக்கப்படுகின்றது.  

குற்றவியல் விசாரணை தொடர்பில் அநுரகுமாரவுக்கு விசேட கடிதம்

குற்றவியல் விசாரணை தொடர்பில் அநுரகுமாரவுக்கு விசேட கடிதம்

வாகன சாரதிகள் சோதனை

மேலும், கவனக்குறைவாக வாகனம் ஓட்டுபவர்கள், போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டுபவர்கள், பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள வாகனங்களை ஓட்டுபவர்களும் சோதனை செய்யப்பட உள்ளனர்.

நாடளாவிய ரீதியில் சோதனையிடப்படவுள்ள வாகனங்கள் | Nationwide Special Transport Operation From Today

இச்செயற்பாடு நடைமுறைப்படுத்தப்படும் காலப்பகுதியில் கவனக்குறைவாக வாகனம் செலுத்தும் சாரதிகள் தொடர்பில் 119 மற்றும் 1997 ஆகிய அவசர தொலைபேசி இலக்கங்களுக்கு தகவல் வழங்க முடியும்.

மேலும், போக்குவரத்து விதிகளை மீறுவது அல்லது பிற குற்றங்கள் தொடர்பான காணொளிகள் இருந்தால், அவற்றை வட்ஸ்அப் மூலமாகவும் அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு : பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம்!

நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு : பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம்!

தெமட்டகொட மேம்பாலத்தின் கீழ் கண்டெடுக்கப்பட்ட குழந்தை

தெமட்டகொட மேம்பாலத்தின் கீழ் கண்டெடுக்கப்பட்ட குழந்தை

     நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW