தெமட்டகொட மேம்பாலத்தின் கீழ் கண்டெடுக்கப்பட்ட குழந்தை
தெமட்டகொட மேம்பாலத்தின் கீழ் புதிதாகப் பிறந்த குழந்தையொன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
பிரதேச மக்களால் தெமட்டகொட பொலிஸாருக்கு கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்டையில், குழந்தை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த குழந்தை ஒரு துணியில் சுற்றப்பட்டு பாலத்தின் அடியில் விடப்பட்ட நிலையில் காணப்பட்டது.
ஓரிரு நாள் குழந்தை
மேலும், பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழந்தையை கொழும்பிலுள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதன் பின்னர் குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணைகளின் பின்னர், சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் குறித்த சிசுவை அந்த இடத்தில் விட்டுச் செல்வது அங்கிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியிருந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த ஆரோக்கியமான குழந்தை ஓரிரு நாட்களுக்கு முன்னர் பிறந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |