பாலமுனை வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

Ampara Hospitals in Sri Lanka Eastern Province
By Laksi Dec 24, 2024 05:29 AM GMT
Laksi

Laksi

அம்பாறை-பாலமுனை (Palamunai) பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பாக வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினருக்கும் பிராந்திய பணிப்பாளருக்குமிடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த விடயத்தை கலந்துரையாடுவதற்காக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி  சகீலா இஸ்ஸடீன் வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது, குறைந்த வளங்களுடன் பெரும் பணிகளை மேற்கொண்டு பிராந்தியத்தில் முதல் நிலை பெற்றுள்ள பாலமுனை வைத்தியசாலையின் சேவைகளை பாராட்டி பேசிய பணிப்பாளர் அங்குள்ள வைத்தியர்கள், சுகாதார உத்தியோகத்தர்கள் ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கலந்துரையாடல்

அத்துடன், வைத்தியசாலையின் சில பிரிவுகளுக்கும் சென்று அங்குள்ள நிலைமைகளை பார்வையிட்டதுடன் வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் மற்றும் தேவைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார்.

பாலமுனை வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல் | Discussion For Development Of Palamunai Hospital

இந்தநிலையில், வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை கேட்டறிந்து கொண்ட பணிப்பாளர் அதில் முடியுமானவற்றை விரைவில் நிவர்த்தி செய்து தருவதாகவும் உறுதியளித்தார்.

 குறித்த நிகழ்வுகளில் பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.சீ.எம்.மாஹிர், பாலமுனை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி ஏ.எல்.ஹரிஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சேதமடைந்த வீதிகளை புனரமைப்பு செய்யும் பணிகளை விரைவுபடுத்துங்கள் - ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை

சேதமடைந்த வீதிகளை புனரமைப்பு செய்யும் பணிகளை விரைவுபடுத்துங்கள் - ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை

கல்முனை வைத்தியசாலைக்குள் சுத்தியலுடன் நுழைந்த இருவர் கைது

கல்முனை வைத்தியசாலைக்குள் சுத்தியலுடன் நுழைந்த இருவர் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGallery