மாலைதீவு - இலங்கை இணைந்து முன்னெடுக்கவுள்ள திட்டம்
மாலைதீவு(Maldives) மற்றும் இலங்கைக்கு இடையில் கூட்டுச் சுற்றுலா திட்டம் செயல்படுத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கும் மாலைதீவு குடியரசின் உயர்ஸ்தானிகர் மசூத் இமாட் இடையில் நேற்று(25) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே இது குறித்து கலந்துரையாடப்பட்டது.
கூட்டுச் சுற்றுலா திட்டம்
கடந்த தேர்தல்களில் ஜனாதிபதி தலைமையிலான, தற்போதைய அரசாங்கம் அடைந்த வெற்றிகளுக்கு மாலைதீவு குடியரசின் வாழ்த்துகளைத் தெரிவித்த உயர்ஸ்தானிகர், தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்கள் குறித்து மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மாலைதீவு மற்றும் இலங்கைக்கு இடையேயான 60 ஆண்டு கால நட்பை வலுப்படுத்தி, தொடர்ந்து பேணுவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டன.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதில் மாலைதீவு ஆற்றும் சிறப்பான பங்களிப்பிற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது பாராட்டுகளைத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

